குஜராத், டிசம்பர் 18: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற கடித போக்குவரத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு செய்திருந்தார்.
குறிப்பாக, கலவரம் உச்சகட்டத்தில் இருந்த 27-2-2002 முதல் 30-4-2002 வரை நடைபெற்ற கடித பரிமாற்றத்தின்போது, அந்த கலவரத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி மோடிக்கும் இடையில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் என்ன? என்று அந்த சமூக ஆர்வலர் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.
ஒரு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும்போது, அவ்விவகாரம் தொடர்பான முக்கிய குறிப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும் என அரசை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்ற விதிவிலக்கை காரணம் காட்டி, “விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை வழங்க முடியாது” என பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.
0 comments:
Post a Comment