வாஷிங்டன், டிசம்பர் 18: அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் காணப்படும் ஈக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக தூண்டி அதனை ஆண் ஈக்கள் மத்தியில் உலவச்செய்தனர். அந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் செக்ஸ் உறவுக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாததால் அவற்றால் உறவில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகரித்து இதை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர்.
இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், செக்ஸ் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து விட்டன. என்பதையும் கண்டறிந்தனர். மன அழுத்தம் அதிகரித்த ஈக்களின் ஆயுட்காலம் 40 சதவீதம் குறைந்து இருந்தது. இதனைக் கொண்டு ஈக்களின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும்.
ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட வேறொரு ஆய்விலும் அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர்.
0 comments:
Post a Comment