அதிராம்பட்டினம், ஜனவரி 07: அதிரையில் இன்று ஏற்பட்ட விபத்தில் வாகனம் மின்கம்பத்தில் மோதி நொறுங்கியது. அதிரை கடற்கரைதெருவை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் இன்று மதியம் 4 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார். வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே வரும் பேருந்தை அறிந்த இவர் திடீர் ப்ரேக் போட்டுள்ளார். உடனே வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள (மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே) மின்கம்பத்தில் மோதி விபத்தானது.
இதில் மின்கம்பம் சேதமடைந்தது. இடது பக்கம் இருந்த கழிவு நீர் வாய்க்காலில் இறங்கியதில் வாகனத்தின் முகப்பு பகுதி, கதவுகள், கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.
மின்கம்பத்தில் மோதியதால் நிகழ இருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. லேசான காயமடைந்த அஷ்ரப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
தகவலறிந்த மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பதை சரிசெய்தனர். விபத்து குறித்து அதிரை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் சில மணிநேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.
0 comments:
Post a Comment