முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்ற சில தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் 9 வது வார்டு கவுன்சிலர் பேட்டை சாலையில் 5 வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் 13 வது வார்டு கவுன்சிலர் அந்த பேட்டை சாலை குண்டும் குழியுமாக ஆகி சேதமாகி உள்ளது. சீர் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பேசியுள்ளார். இது வரவேற்கத்தக்கது பேட்டை சாலை தற்பொழுது உள்ள நிலையை பார்க்கும் பொழுது அந்த சாலை தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. காரணம் மக்களும், வாகனங்களும் செல்ல முடியாமல் படு மோசமாக உள்ளது. அதனை பேரூராட்சி நிர்வாகம் கவனத்திற்கு எடுத்து சீர் செய்யவேண்டும். சமீபத்தில் மன்னார்குடி நகராட்சி வறண்டு போன குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்பிய செய்தியை நாம் தெரிந்தோம். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்க்கத்தக்கது.
அது போல முத்துப்பேட்டையிலும் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு களால் தூர்ந்தும் பல குளங்கள் தண்ணீர் வரமுயாத நிலையிலும் உள்ளது. உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி கடமை உணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டறை குளத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பயன் அளிக்காத வகையில் பல லட்சம் மன்றத் தலைவரால் செலவு செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு தேவையற்ற செயலாகும். இதற்க்கு செலவிடப்படும் பணத்தை தூர்ந்துள்ள வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து முத்துப்பேட்டை நகரத்தில் நீர் ஆதாரம் கிடைக்க பேரூராட்சி முன்வர வேண்டும் இவ்வாறு கோரிக்கை மனுவில் நெய்னா முஹம்மது கூறியுள்ளார்.
இப்படிக்கு: நகரத் தலைவர் நெய்னா முஹம்மது.
நமது நிருபர்: AKL அப்துல் ரஹ்மான்.
0 comments:
Post a Comment