100 படங்களுக்கு மேல் இசையமைத்து, அவற்றில் பலவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிகள் பெற்று யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அஞ்சான், சிப்பாய், வை ராஜா வை, தரமணி, இடம் பொருள் ஏவல் என மிகவும் எதிர்பார்க்கப்படும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் யுவன் சமீபகாலமாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் கோலிவுட் வட்டாரத்தில்.
ஏற்கனவே இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜா தற்போது மூன்றாவது திருமணமும் செய்து கொண்டதுடன், இஸ்லாமிய மதத்திற்கும் மாறிவிட்டார் என்பது தான் அந்த பரபரப்பான தகவல். அவரவர் விருப்பம்போல இந்த செய்தியை பற்றி பேசத் துவங்கியதும், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தனது டுவிட்டரில் ‘எது உண்மை?’ என்பதை வெளிப்படையாக கூறிவிட்டார் யுவன்.
யுவன் தனது டுவிட்டர் வலைதளத்தில் “எனக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடந்துவிட்டது என்று வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது உண்மை தான். மேலும் அதைப்பற்றி நான் பெருமைப் படுகிறேன். என் குடும்பத்தினருக்கும் இதில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. எனக்கும் என் தந்தைக்குமிடையில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருக்கிறார். மேலும் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தின் இரு பாடல்களுக்கு இசையமைத்துவிட்டதாகவும், பாடல்களின் விஷுவல்கள் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment