முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தொடரும் கியாஸ் சிலிண்டெர் அவலம் -உண்ணாவிரத மிரட்டல் விடுத்த மாலிக் !!

ருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து மரியா கேஸ் ஏஜென்ஸி மூலம் எச்.பி சிலிண்டர்களும் கோட்டூர் மன்னை ஏஜென்ஸி மூலம் இன்டன் கேஸ் சிலிண்டர்களும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 



அவர்கள் நுகர்வோர்களுக்கு நேரடியாக சப்ளை செய்வதாக கூறி கட்டணம் வசூல் செய்துவிட்டு வீடுகளில் சப்ளை செய்யாமல் முத்துப்பேட்டை நகர் குறிப்பிட்ட பகுதியில் ஒரு இடத்தில் லாரியில் மொத்தமாக வைத்துக்கொண்டு சிலிண்டர்களை நுகர்வோர்களுக்கு வழங்குவதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் சிலிண்டர்களை வீடுகளில் நேரடியாக சப்ளை செய்யவேண்டும் எனக் கூறி பேரூராட்சி அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருப்பதாக காவல் நிலையத்தில அனுமதி கடிதம் கொடுத்தார். 

காவல்துறை உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்து கடிதம் அனுப்பியது. இருந்தாலும் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருப்பேன் என்று நேற்று காலை சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் பேரூராட்சி அலவலகம் அருகில் உட்கார முயற்சி செய்தார். அப்பொழுது அவர்களுக்கு ஆதரவாக ஊழல் எதிர்ப்பு இயக்க நிர்வாகி நிஜாமுதீன,; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் காளிமுத்து, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், முகம்மது மைதீன், தொழிலாளர் சங்க நிர்வாகி பாலகுமார் மற்றும் கிஷோர் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க வந்தனர். 

அப்பொழுது முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் நடந்த சமரச கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், வருவாய் தனி ஆய்வாளர் குணசீலன,; கேஸ் ஏஜென்ஸி மேனேஜர்கள் லூதுர்சாமி, முருகேஷ் உட்பட போலிசார் கலந்து கொண்டனர். 

இதில் கேஸ் சிலிண்டர்களை வீடு வீடாக சென்று விநியோகிப்பதாகவும் சிலிண்டர்கள் பதிவு செய்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் என்றும் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களுக்கு பெறப்படும் தொகைக்கான சரியான ரசீது வழங்கப்படும் என்று சம்மதம் தெரிவிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் உண்ணாவிரதத்தை தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார். இச்சம்பவத்தால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல:ஜே ;ஷேக் பரீத் 



0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)