பதவி ஆசையும் பண மோகமும் ஒரு குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பழைய புத்தகங்களைத் தேடினால் அந்தக் குடும்பம் எப்படி அந்நியோன்யமாக இருந்துள்ளது என்பதை உணர முடியும்!
கருணாநிதியின் அன்பு நண்பர்களில் ஒருவர் குளித்தலை இளமுருகு பொற்செல்வி. அவர் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி, 'கலைஞர் பிறந்தநாள் மலர்’ வெளியிடுவார். அதற்கு 'அஞ்சுகம் மலர்’ என்று பெயர். 1970-ம் ஆண்டு அவர் வெளியிட்ட மலரில் 'அண்ணன்’ அழகிரியும், 'தம்பி’ ஸ்டாலினும் எழுதிய கட்டுரைகள் இவை!
மு.க.அழகிரி எழுதி இருப்பது:
நான் (அழகிரி) 1950-ம் ஆண்டு இறுதியில் திரு மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தேன். இப்போது புதுமுக வகுப்பு முடித்துள்ளேன். தன் தந்தையைப்பற்றி எழுதுவதாகச் சொல்லிவிட்டுத் தன்னைப்பற்றி எழுதுகிறானே என்று பலர் நினைப்பார்கள்.
நான் மிகவும் பூரிப்படைகிறேன். அந்தப் பூரிப்பு நான் கருணாநிதியின் மகன் என்பதற்காகவே தவிர, தமிழக முதலமைச்சரின் மகன் என்பதற்காக அல்ல. நான் என் தந்தைக்கு இரண்டாவது மகன். எனக்கு ஒரு அண்ணனும் இரண்டு தம்பிகளும் ஒரு செல்லத் தங்கையும் உண்டு. எனது அண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம் முடிந்துவிட்டது. எனது அண்ணன் முத்துவுக்கு 'அறிவுநிதி’ என்ற ஒரு ஆண் குழந்தையும் உண்டு. என்னைப்பற்றி கேட்கிறீர்களா? எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!
எனக்கு எனது தந்தையிடம் மிகவும் பயம். அந்த பயத்துக்குக் காரணம் என்னவென்று இதுவரை நான் கண்டுபிடிக்கவில்லை. அவர் முன் நின்று பேசுவதற்குக்கூட நான் மிகவும் அச்சப்படுவேன். பேசும்போது உடம்பெல்லாம் வியர்த்துவிடும். சமீபத்தில் எனது தந்தை கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, நான் ஒருநாள் சென்று பார்த்தேன். அவர் அப்போது என்னிடம் முரசொலியைப்பற்றி சில கேள்விகள் கேட்டார். நான் அதற்கெல்லாம் பதிலளிக்கையில் என் உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. அந்த அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருந்தபோதும் என் உடல் வியர்க்கிறது என்றால், எந்த அளவுக்கு என் தந்தையிடம் எனக்கு பயம் உள்ளது என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கே என் தந்தையிடம் அவ்வளவு பயம் என்றால், அவருக்குக் கீழ் வேலைசெய்யும் மற்றவர்கள் எவ்வாறுதான் வேலை செய்கிறார்களோ?
ஒருநாள் நான் தலையைக் கோபுரம்போல் தூக்கி வாரியிருந்ததைப் பார்த்துவிட்டார் என் தந்தை. என்னை உடனே அழைத்து ஓர் ஆசனத்தில் உட்காரவைத்தார். அதுதான் என் தந்தையின் முன் உட்காரும் முதல் தடவையாகும். அதுவே கடைசி தடவையாகவும் இருக்கும். பின்பு ஒரு சீப்பை எடுத்து, எனக்கு நேர்வகிடு எடுத்துச் சீவினார். பின், 'இப்போதுதான் நீ என் மகனாகத் தெரிகிறாய்' எனச் சொன்னார்.
நான் எப்போதாவது உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதாக என்னுடைய தந்தை கருதினால், உடனே தன் பொறுமையை இழந்துவிடுவார். என்ன விஷயம் என்று கேட்காமலே என்னை அடித்துவிடுவார். பிறகு என் அன்னையை அழைத்து, 'அழகிரி சாப்பிட்டானா?’ என்று கேட்பார்.
நமது தெய்வம் அண்ணாவைப்போல் பொறுமையான மனிதர் இவ்வுலகில் யாராகவும் இருக்க முடியாது. இருந்ததும் கிடையாது. ஏன் இப்படி குறிப்பிடுகிறேன் என்றால், ஒருநாள் என் தந்தை என்னையும் எனது அண்ணன் முத்துவையும் அவர்முன் பாடுவதற்காக காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். அந்தப் பாட்டு, எனது தந்தை கதை - வசனம் எழுதிய 'தாயில்லாப் பிள்ளை’ படத்தில் வந்தது. 'வாய்யா, வாய்யா, சின்னையா’ என்ற பாடலாகும். நானும் என் அண்ணனும் பாட, அண்ணா டேப் ரெக்கார்டரில் அந்தப் பாட்டை பதிவுசெய்துகொண்டார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் அந்தப் பாட்டை டேப் ரெக்கார்டர் மூலம் கேட்பாராம். என்னுடைய பாட்டை கேட்கிற அளவுக்கு அவருக்குப் பொறுமை இருந்திருக்கிறது என்றால், அவர் எப்படிப்பட்ட பொறுமைசாலியாக இருந்திருக்க முடியும். அதற்காகவே இந்த உதாரணத்தை எழுதினேன். அண்ணா என்னைப் பார்க்கும்போதெல்லாம் ''வாய்யா, வாய்யா, சின்னையா'' என்றே அன்பாக அழைப்பார். அந்தத் தெய்வம்தான் இப்போது நம்மிடையே இல்லை.
என் தந்தையின் தினசரி அரசியல் வாழ்க்கையைப்பற்றி ஒருசில வரிகள் எழுதுகிறேன். என் தந்தை காலை சரியாக 6.30 அல்லது 7 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். பின்பு, எல்லாச் செய்தித்தாள்களையும் படிப்பார். எழுந்த 15 நிமிடத்துக்குப் பிறகு அந்தரங்கக் காரியதரிசியுடன் பைல்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். இரண்டு மணிநேரம் பைல்களைப் பார்த்துவிட்டுக் குளிக்கச் செல்வார். பிறகு, காலை உணவு சாப்பிட்ட பிறகு, வந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்க்கச் சென்றுவிடுவார். இவையெல்லாம் மாடியில் இருந்தபடியே நடந்துவிடும். சில நிமிடங்களுக்கு ஒருமுறை 'கிரிங்... கிரிங்’ என்ற சப்தம் கேட்கும். அதைக் கேட்டவுடன், என் தந்தைக்குப் பிள்ளைக்குப் பிள்ளையாய் வளர்ந்துவரும் 'மணி’, சப்தத்தை விட வேகமாக மாடிக்கு விரைந்து ஓடுவான். பின்பு அதே வேகத்தில் திரும்பிவந்து, யாரின் பெயரையாவது குறிப்பிட்டுக் கூப்பிட்டு, உங்களை வரச் சொன்னார் என்பான். காலை 7 மணி முதல் 10 மணி வரை, பின்பு 4 மணி முதல் 5 மணி வரை பம்பரம்போல் சுழன்றுகொண்டிருப்பான் மணி.
பார்வையாளர்களைப் பார்த்து முடித்த பின், கோட்டைக்குச் சென்றுவிடுவார். மதிய உணவு 12 மணிக்கு வீட்டில் இருந்து செல்லும். அவர் சாப்பிட 3 அல்லது 3.30 மணி ஆகிவிடும். சிலநாள் 4 மணிக்கு வீட்டுக்கு வருவார். வந்தால், அரை மணிநேரத்தில் கிளம்பி நிகழ்ச்சிக்குச் செல்வார். நான் என் தந்தையை சில நாட்கள்தான் பார்ப்பேன் - அதுவும் அவர் ஊருக்குப் போகும்போது. எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு போவார். அப்போதுதான் அவரைப் பார்க்க முடியும். நான் எந்த வகுப்புப் படிக்கிறேன் என்றுகூட அவருக்குத் தெரியாது. தனது பிள்ளைகள் தேர்வில் தேறினார்களா, இல்லையா என்பதைவிட, நெய்வேலியில் வேலைநிறுத்தம் செய்தவர்கள் வாபஸ் வாங்கிவிட்டார்களா, இல்லையா என்பதுதான் அவருக்கு முக்கியம். மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தன் கண்ணைப்பற்றிகூட கவலைப்படாமல், கண்ணில் கட்டுடன், 'வேலை நிறுத்தத்தினை திரும்பப்பெறும்படி’ நெய்வேலி ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை அவர் வாயினால் சொல்ல, அதை எழுதிப் பத்திரிகைகளுக்கும் ஊழியர்களுக்கும் தெரிவித்து, அவர் வெற்றியும் பெற்றார்.
தமிழுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் படுத்திருந்த காட்சியை நினைத்தால் என் உள்ளமெல்லாம் நடுங்குகிறது; கண்கள் குளமாகின்றன. இப்படிப்பட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்தேன் என்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இதுவரை நான் எழுதியதெல்லாம் எனது தந்தையிடம் கூற வேண்டுமென்று ஆசைதான். அதை - எனது பாட்டிக்குக் காணிக்கையாக வெளிவரும் மலரின் மூலம் வெளியிட ஒப்புக்கொண்ட ஆசிரியருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
--------
''அப்பா நிரந்தரக் கைதி!'' மு.க.ஸ்டாலின் எழுதியது:
அ... ம்... மா... என்று எழுத்து கூட்டுகிறான் மழலை மொழியால் - ஓராண்டுச் சிறுவன் ஒருவன்! அள்ளி அணைக்கிறார்கள் அருமைமிகு அன்னையார். மறுபடியும் சிறுவன் எழுத்துக் கூட்டுகிறான். அ... ம்... மா! அம்மா, 'அப்பா சொல்’ என்கிறார்கள். சிறுவன் அ... ப்... பா.. என்று எழுத்துக் கூட்டுகிறான்.
அந்தச் சிறுவனின் குறுகிய கண்களிடையே ஒரு பிரகாசம் தோன்றியது. மறுபடியும் அப்பா என்று அழைக்கிறான். அன்று முதல் இன்று வரை அப்பா, அப்பா என்று ஆசை மிளிர, ஆர்வம் ததும்ப பெருமை பொங்க பூரிப்பு கொப்பளிக்க, உள்ளம் புளகாங்கிதம் அடைய அப்பா அப்பா என்று அழைத்துக்கொண்டிருக்கிறான். ஆம்! அந்தச் சிறுவன் நான்தான்! என் அன்புத் தந்தை நான் முதன்முதல் அப்பா என்று அம்மா சொல்லிக் கொடுக்க அழைத்தபோது, ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தார்: ஏன்? எதற்காக? இன்று நான் மட்டுமல்ல, நம் தமிழகமே எண்ணி எண்ணி மகிழும் 'கல்லக்குடி’ பெயர் மாற்றத்துக்காக. அன்று போர் தொடுத்து, கல்லக்குடியிலே களம் அமைத்து தண்டவாளத்திலே தலை கொடுத்து பெற்ற தண்டனைதான் ஆறு மாதங்கள்.
கல்லக்குடியின் வெற்றிவீரராகத் திகழும் கலைஞரைத் தலைவராகப் பெற்றுள்ள கழகமும் காளைகளும் கண்மணிகளும் நண்பர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்திருக்கும்போது, நான் தந்தையின் வெற்றிகுறித்து எவ்விதம் பெருமைகொள்வேன் என்பதை எழுத, எனக்கு என் தந்தையின் ஆற்றல் இல்லையே என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.பதவி ஆசையும் பண மோகமும் ஒரு குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பழைய புத்தகங்களைத் தேடினால் அந்தக் குடும்பம் எப்படி அந்நியோன்யமாக இருந்துள்ளது என்பதை உணர முடியும்!

கல்லக்குடியின் வெற்றிவீரராகத் திகழும் கலைஞரைத் தலைவராகப் பெற்றுள்ள கழகமும் காளைகளும் கண்மணிகளும் நண்பர்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்திருக்கும்போது, நான் தந்தையின் வெற்றிகுறித்து எவ்விதம் பெருமைகொள்வேன் என்பதை எழுத, எனக்கு என் தந்தையின் ஆற்றல் இல்லையே என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
நான் ஒரு வயது சிறுவனாக இருக்கும்போதுதான், கல்லக்குடிப் போராட்டம் தொடங்கியது. இன்று அதனுடைய வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில்தான் எண்ணுகிறேன். அப்பப்பா! கழகம் இத்தனை ஆண்டுகளில் எத்தனை போராட்டங்களை, சித்ரவதைகளை, சிறைக்கூடங்களை, அடக்குமுறைகளை கடந்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
என்னுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும், நமது அருமை ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களை சந்தித்தபோதெல்லாம், அவர் பாசத்தோடு உரையாடிய அந்த ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் கதைகளை மனதில் சொல்லி ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
''சென்று வா தம்பி! வென்று வா'' என்று கூறி என் தந்தையை கல்லக்குடி களத்துக்கு அனுப்பிய அந்த அண்ணன் எங்கள் அன்பு தெய்வம். ''சென்றுவந்தேன் அன்று; வென்றுவந்தேன் இன்று! கொண்டுவந்தேன் கல்லக்குடியை'' என்று தன் வெற்றியை என் தந்தை - தன் மூத்த தம்பி கூறுவதைக் கேட்க அவர் இல்லையே என்பதுதான் நம் மகிழ்ச்சியிடையே தோன்றும் ஏக்கப் பெருமூச்சாகும்.
'இந்த வெற்றியைப்போல் இன்னும் ஆயிரம் பதினாயிரம் வெற்றிகளை, அண்ணனே எங்கள் இதய மன்னனே, வங்கக் கடற்கரையில் துயிலுறும் காஞ்சிப் பெருமகனே... உன் காலடியில் சமர்ப்பிக்கிறோம்’ என்று தொடர்ந்து அயர்வறியாது பணியாற்றிவரும் எனது அப்பாவின் பிறந்தநாளன்று நானும் அவருடன் சேர்ந்து அண்ணனை நினைக்கிறேன் - அப்பாவின் சீரிய பணியினைச் சிந்திக்கிறேன். வாழ்வது வையகம் வாழ்வதற்காக என்பதை உணர்கிறேன். தொண்டில் எனது அப்பா தன்னை நிரந்தரக் கைதி ஆக்கிக்கொண்டதின் உண்மையை அறிகிறேன் - மகிழ்கிறேன்!

0 comments:
Post a Comment