முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மோடி வருகையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக வடபழனி அலுவலகம் முற்றுகை: கேம்பஸ் ஃப்ரண்ட்நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது



மதசார்பற்ற இந்திய நாட்டில் பல மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் பயிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகத்தில் .

தன்னை இந்து தேசியவாதி என்று மத சார்புடைய சிந்தனை கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எஸ்.ஆர்.எம்.பழகலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் பாஸிச சித்தாந்தம் கொண்ட ஒரு நபர் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தருவது தமிழகத்தில் ஒற்றுமையோடு இருக்கும் மாணவர்கள் மத்தியில் பிளவை உண்டாகும் அபாயம் உள்ளது.எனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இதை வன்மையாக கண்டித்ததோடு, இன்று ( 9.02.2014) காலை 10:15 மணியளவில் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வடபழனி தலைமை அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது . 

இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநில நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)