தொடர்ந்து நான்காவது நாளாக சிறைவாசிகள் விடுதலைக்கான போராட்ட்டம் தொடர்ந்தது.இன்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்,SDPI பொதுச் செயலாளர் நிஜாம்,அமீர் அம்ஸா உள்ளிட்ட தலைவர்கள் ரஹீமை சந்தித்து தங்கள் ஆதரவை தந்தனர்.ஆம் ஆத்மி கட்சி தோழர்கள் நமது அழைப்பை ஏற்று உடனே களத்துக்கு வந்தது மகழ்ச்சி அளித்தது.இரவு எட்டு மணி அளவில் மண்டபத்துக்கு மருத்துவர்களுடன் வந்த காவல்துறையினர் ரஹீம் பாயின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு அவரை இங்கிருந்து செல்லும்படியும் அல்லது கைது செய்து விடுவோம் என்று எச்சரித்தனர்.கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தவுடன் அவரை அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று ராயபேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதித்து உள்ளனர்.இறைவன் நாடினால் நம் போராட்டம் வெல்லும். சிறைக் கதவுகள் திறக்கும்
0 comments:
Post a Comment