முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை -முதல்வரை சந்திக்கும் இந்திய தேசிய லீக் மகளிரணியினர் - பெண்கள் திரளாக வரும்படி தடா ரஹீம் வேண்டுகோள் !!



\
அன்பு சொந்தங்களே அஸ்ஸலாமுஅலைக்கும் சுமார் 6 நாட்களுக்கு
பிறகு இன்று ஒரு பதிவு போடுகின்றோம் ....
இந்த 6 நாட்களாக நான் (தடா ஜெ.அப்துல்ரஹிம்) முகநூலை
பார்க்கவில்லை ! பதிவுகள் நான் போடவில்லை !! 
15 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை கோரி உண்ணா நிலை போராட்டம் தொடர்ந்தேன் 
அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து அமைப்பு சகோதரர்களும் 
நேரில் வந்து அன்பான பல வேண்டுகோள்களும் உடல்நலம் பற்றியும் விசாரித்து பல கோரிக்கை வைத்தனர் ...

அதே போன்று தமிழ்தேசிய அமைப்புகளும் , வழக்கறிஞர்கள் , அரசியல் அமைப்புகள் என பல சகோதரர்கள் ஆதரவு கொடுத்தது சிறைவாசிகளின்
விடுதலையில் சுமார் 10% வெற்றி பெற்றதாக நம் இயக்க சகோதரர்கள்
கூறினாலும் இது ஒரு ஆரம்பமே என்பது உண்மை ...

அதே போன்று முகநூல் சகோதரர்களின் ஆதரவை பார்த்த நான் 
கண்கலங்கி விட்டேன் . அந்த அளவு ஆதரவு அல்லாஹ் போதுமானவன்

கண்ணியத்திற்குறிய இஸ்லாமிய சகோதரர்களே!
மதிப்பிற்குறிய தொப்புள்கொடி உறவுகளே!

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்யவலியுறுத்தி கடந்த 24 ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்டவர்களின் விழிம்பு நிலை போராட்டமான காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்தோம் 

அதன்பின் நேற்று 28 ஆம் தேதி மாலை அரசுக்கு சிறு அவகாசம் அளிக்கும் விதமாக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்தது தாங்கள் அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் முஸ்லிம்களின் விடுதலை கோரி நாங்கள் எடுத்த இந்த விழிம்பு நிலை போராட்டத்திற்கு ஆதரவளித்து அரசின் கவனத்தை ஈர்க்க செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,,தமிழ் அமைப்புகளுக்கும்,குறிப்பாக மீடியா ஆதரவு இல்லாத நிலையில் இப்போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த முகநூல் சமுதாய போராளிகளுக்கும்,தமிழகத்தைசேர்ந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு ஆதரவு அளித்த எம் சமூக சொந்தங்களுக்கும்,இப்போராட்டத்தில் கழந்து கொள்ள முடியாமல் தொலைவிலிருந்து துஆ செய்த சகோதரர்களுக்கும்,அயல்நாடுகளில் தன் இளமைகளை தொலைத்து வெளியுலக நவீன சிறைச்சாலையில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு துஆ செய்த நல்ல உள்ளங்களுக்கும்,மதங்களை கடந்து மனித நேயத்தோடு ஆதரவு அளித்த மாற்று மத சகோதரர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கும்,சிறைச்சாலையில் இருந்து போராட்டகளத்திலுள்ளவர்களுக்காக துஆ செய்த சிறைவாசிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தாருக்கும் ,நாங்கள் அறியாபுரத்திலிருந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நாங்கள் சொல்லவிடுபட்டவர்களுக்கும்
மேற்சொன்ன அனைத்தயும் எங்களுக்கு உதவியாக செய்து கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்

அல்ஹம்துலில்லாஹ்..
எல்லாபுகழும் இறைவனுக்கே..

மேலும் சிறைவாசிகளின் விடுதலைக்காக நாங்கள் எடுக்கும் அடுத்த கட்ட அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)