முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லீம் லீக்கிற்கு வேலூர் --முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் MP மீண்டும் போட்டியா?

வேலூர், மார்ச்.6–
வேலூர் தொகுதியில் மீண்டும் அப்துல் ரகுமான் போட்டி?வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக அப்துல்ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க தி.மு.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து ஒப்பந்த அறிக்கையில் கருணாநிதி முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கையெழுத்திட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் வேலூர் தொகுதியில் ஏற்கனவே காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் ஆகியோர் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளனர். 3வது முறையாக அக்கட்சி வேலூர் தொகுதியில் களத்தில் இறங்கியுள்ளது.
கட்சியில் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடக்கிறது. கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் போட்டியிட சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் அப்துல் ரகுமான் எம்.பி. மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் பிரமுகர்கள் தொடர்பு, வேலூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிந்தவர் அப்துல்ரகுமான், மேலும் அவரது சாதனைகளை கூறி ஓட்டு கேட்டால் எளிதில் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என கட்சி மேலிடம் கருதுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 8ந் தேதி நடக்கிறது. இதில் வேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அப்துல் ரகுமான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:–

அப்துல் ரகுமான் – 3,60,474, எல்.கே.எம்.பி.வாசு (அ.தி.மு.க.) – 2,53,081, சவுகத் செரீப் (தே.மு.தி.க.) – 62,696, ஏ.கே.ராஜேந்திரன் (பா.ஜ.க.) – 11,184.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)