சென்னை, மார்ச். 6–
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
அப்போது சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தினார்.
ஆனால் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் திருமாவளவன் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 3 தொகுதிகளையாவது ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த தொடங்கினார். இதனால் நேற்று உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது. எந்த முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த திருமாவளவன் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.
இதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமாவளவனுடன் இரவில் போனில் பேசியதாக தெரிகிறது. இதில் 2 தொகுதிகளை பெற திருமாவளவன் சம்மதித்து விட்டார்.
அவருக்கு சிதம்பரம், திருவள்ளூர், தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று அறிவாலயத்தில் இதற்கான உடன்பாடு ஏற்படுகிறது.
0 comments:
Post a Comment