சென்னை, மார்ச்.5–
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடு துறை, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
2–வது நாளான இன்று தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலிபூங்குன்றன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து மற்றும் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தொகுதி பங்கீட்டை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது.
மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ReplyDeleteஇது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பரிமாறி கொள்வது மனித இயல்புதான்.
7.5.கோடி தமிழக மக்கள்.
39 நாடாளுமன்றத் தொகுதிகள்.
234 சட்டமன்றத் தொகுதிகள்.
தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 6 சதவிகிதம்.
ஏறக்குறைய 50 இலட்சம்.
மொத்தமுள்ள 5.5 கோடி தமிழக வாக்காளர்களில்
முஸ்லிம் வாக்காளர்கள் ஏறக்குறைய 35 இலட்சம்.
எந்த தொகுதியிலும் முஸ்லிம்கள் 40 சதவிகித அளவிற்கு கூட இல்லை.சிதறி வாழ்கின்றோம்.
இப்போதைக்கு ஒரு தொகுதி அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே சாத்தியம். அது தான் எதார்த்தம்.