தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் மீது கொலை வழக்குகள் உடபட 20 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கலின்போது அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான சனிக்கிழமை அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், இவர் மீது திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி பிரிவு 6 வழக்குகள், கொலை மிரட்டல் பிரிவில் 7 வழக்குகள், சொத்து சேதப்படுத்துதல் பிரிவில் 6 வழக்குகள் உடபட 20 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுநலனில் அக்கறை உள்ளவர்களாகவும் ,சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராகவும் ,இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும் ,தேசிய ஒருமைப்பாடு ,சமூக நல்லிணக்கம் ,ஆகியவற்றில் உறுதியானவராகவும் ,இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன சட்டமும் தேர்தல் விதிமுறைகளும் கூறுகின்றன .
ஆனால் தஞ்சையில் பாஜக வின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளருக்கோ ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் .அதுவும் ஒஎரு சமுதாயத்திற்கு எதிரான முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான கலவர வழக்குகள் .
இவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் அதிகாரி மீது வழக்கு போட யாரேனும் சமூக ஆர்வலர்கள் முன் வரும் பட்சத்தில் அவருக்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் துணை நிற்கும் .
0 comments:
Post a Comment