முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி ஓர் கண்ணோட்டம் ---வெற்றி வேட்பாளாராகும் ஹைதர் அலி !!



இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்… அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 1) மயிலாடுதுறை 2) கும்பகோணம், 3) பாபநாசம், 4) திருவிடைமருதூர், 5)பூம்புகார் மற்றும் 6) சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் கடந்த தேர்தலில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கின்றது. மற்ற நான்கு தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் பாமகவும் மற்றொன்றில் விசிகவும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கின்றன.


** இந்த ஆறு சட்டமன்ற தேர்தல்களிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
= 946777 (சராசரியாக 82 சதவிகிதத்திற்கும் கூடுதலாக)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 414722 (43.80%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 472832 ( 49.94%)
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9495 (1.00%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்….
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்


1) பாமக (4% அதாவது 37,871 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 18935 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (414722) இருந்து கழித்தால் கிடைப்பது = 357916 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்….
1) மனிதநேய மக்கள் கட்சி (2.48% அதாவது 19814 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)

2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்…. என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28403 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (357916 + 19814 +28403) = 406133 வாக்குகள்.
இது தான் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்….
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்……


இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்…
1) தேமுதிக (5.6% அதாவது 53019 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14201 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2.48 % அதாவது 19814 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் (6% அதாவது 56807 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் இன்னொரு 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊட்கங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (472832) இருந்து கழித்தால்….

(472832) – (53019 +14201 + 19814 + 56807) = 328991 வாக்குகள்.
ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 406133 (42.90%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328991 (34.75%)
வாக்கு வித்தியாசம் = 77142 வாக்குகள்.
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (77.5%)

வரும் தேர்தலில் 88 சதவிகித வாக்குப் பதிவு இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்… மொத்த வாக்குகளான (இந்த முறை) 13 லட்சம் வாக்குகளில் பத்து சதவிகிதம் அதாவது 130000 (ஒரு லட்சத்தி முப்பதாயிரம்) வாக்குகளை பாஜக கூட்டணியும் காங்கிரஸும் பிரித்துக்கொள்ளும் (காங்கிரஸ் சார்பாக மணிசங்கர் ஐயர் நிற்பதால் பாஜக கூட்டணி வாக்குகளில் கணிசமான சேதாரம் இருக்கும்.


ஆக திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி மிகத்தெளிவான வெற்றியை மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். 

அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.


பின் குறிப்பு: திமுக – அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)