புதுடெல்லி: முஸ்லிம்கள் காங்கிரஸ்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது
அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு
வந்தால் எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று
நம்புகிறோம். என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 60க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான முசாபர் நகர் தாக்குதலில் முஸ்லிம்களை
காப்பாற்ற சமாஜ்வாதி அரசு முயலவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
அதே போல
தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரமாட்டோம் என மாயாவதி உறுதியளிக்க
தவறிவிட்டதாகவும் இமாம் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு பெரும் ஆபத்தை எதிர்
நோக்கியுள்ளதாகவும், இதற்காகவே மதவாத சக்திகளின் கையில் நாடு சென்றுவிடாமல்
நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை
இமாம் சந்தித்து முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் பொய்
வழக்குகளில் சிக்கியுள்ள முஸ்லிம்கள் குறித்தும் பேசியமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment