முத்துப்பேட்டை அருகே துளசியாப்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது அசாலின் .இவரது இளைய மகன் அப்துல் ரவூப் .வயது 12.இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்று வருகிறார் .
இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான துளசியாப்பட்டினத்திளிருந்து முத்துப்பேட்டைக்கு வருவதற்காக பேரூந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார் .அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர் .
தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று இவர்கள் இருவரையும் வழிமறித்து தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாள் ,இரும்பு குழாய் ,கத்தி ,போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு மூர்கத்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிகொண்டிருந்த சிறுவனை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் .
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுவன் அப்துல் ரவூபை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .அங்கு சிறுவன் அப்துல் ரவூபுக்கு தலை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர் .
தஞ்சையில் இருக்கும் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் ஆசிரியர் ஜே .ஷேக்பரீத் அவர்கள் இச்சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக சிறுவன் அப்துல் ரவூப் அனுமதிக்கப்பட்டுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .சிறுவனின் நிலை குறித்தும் மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார் .பின்னர் அங்கு இருந்தசிறுவனின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் கூறினார் .
mohamed sulthan. muthupet. சிறு வன் என்று கூட பார்க்காமல் இப்படி அடித்துள்ளார்களே இவர்கள் மனிதர்கள் தானா இல்லை மனித வடிவில் நடமாடும் மிருகங்களா?
ReplyDelete