திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்று விழா தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.
இதில் சீமான் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்களுடன் கொள்கை உறுதிமொழி ஏற்றார். இதனை தொடர்ந்து அவர் பேசும்போது ,தமிழர் விரோத பாஜக வை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார் .
மேலும் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை நாகரீகமற்ற முறையில் பேசிய அக்கட்சியை சேர்ந்த ஹெச் .ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் .தமிழக அரசியல் கட்சிகள் எந்த காரணம் கொண்டும் பாஜக வோடு கைகோர்க்க கூடாது தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவணம் கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேதாபாலா, மண்டல செயலாளர் தென்றல் சந்திர சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் கந்தன,; மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் வடுவூர் முருசேகன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கரையங்காடு சரவனன், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய இணைச் செயலாளர் ராஜேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், நகர நிர்வாகிகள் ஜெக்கரியா, சீனிவாசன், ஹஜ்முகம்மது ஒன்றிய நிர்வாகிகள் ஜாம்மை சேகர், செல்லப்பா, தீபன், உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதே போல் இடும்பாவணம் கடைவீதியில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் சீமான் கொடி ஏற்றி வைத்தார்.
0 comments:
Post a Comment