முத்துபேட்டை, டிசம்பர் 12: திருவாரூர்-காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதனை வலியுறித்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க உள்ளதாக சமூகநல சங்கத்தின் தலைவர் அஹ்மத் அலி ஜாபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "திருவாரூர்-காரைக்குடி ரயில்வே வழி தடம் மிகவும் பழமையானது இந்த தடத்திலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகலரயில் பாதைகளாக மாற்றுவதற்காக கடந்த ஆண்டுகளில் இந்த தடத்தில் இயக்கப்பட்டுவந்த ரயில்கள் தற்பொழுது மாற்றுபாதையில் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் மீட்டர்கேஜ் ரயில் பாதையான இந்த வழி தடத்தை அகலப்பாதையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொழுது ரயில்வே டிராக்குகள் பிரிக்கும் பணி மிகவும் ஆமைவேகத்தில் நடைபெற்றுவருகின்றன. எனவே இந்த பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும் என்பதனை வலியுறித்தி அமைச்சர்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளோம் .
மேலும் சந்திப்பிற்கான தேதியினை பின்னர் அறிவிக்கின்றோம் அப்பொழுது சென்னையில் உள்ள பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மற்றும் அதிரைவாசிகள் கண்டிப்பாக அவர்களது வாகனத்தில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அஹ்மத் அலி ஜாபர் ஏற்கனவே இந்த ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...
ரிப்போர்ட்டர் இல்யாஸ்
ரிப்போர்ட்டர் இல்யாஸ்
0 comments:
Post a Comment