முத்துப்பேட்டை பஸ் நிறுத்தம் என்றாலே ,அது சட்டென்று நினைவுக்கு வருவது பங்களாவாசல் தான். ஏன் என்று சொன்னால் முத்துப்பேட்டையின் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த
பங்களா வாசல்.
முத்துப்பேட்டையிலிருந்துசெல்லும்பேரூந்துகள் பட்டுக்கோட்டை ,செல்வதாக இருந்தாலும் சரி,அல்லது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் செல்வதாக இருந்தாலும் சரி இந்த பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தில் நின்று விட்டுதான் செல்ல வேண்டும் .
அதே போல் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினத்திளிளிருந்து வரும் பேரூந்துகள் நாகப்பட்டினம் செல்ல வேண்டுமானாலும் சரி ,திருத்துறைபூண்டி அல்லது வேதாரண்யம் செல்ல வேண்டுமானாலும் சரி பங்களா வாசல் பேரூந்து நிறுத்தம் வழியாக தான் செல்ல முடியும் .
இது ஒரு புறம் இருந்தாலும் ,தங்களது வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் குறிப்பாக பெண்கள், இந்த பங்களா வாசல் நிறுத்தத்திலிருந்து புறப்படுவதையே பெரும்பாலும் விரும்புகின்றனர் .ஏன் என்று சொன்னால் எந்த வித தொந்தரவுகளும் ,கூட்ட நெரிசல்களும் இல்லாமல் அமைதியாக இருப்பதனாலும் ,குறிப்பாக பெண்கள் நின்று செல்வதற்கு பாதுகாப்பாக இருப்பதினாலும் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர் .
கடந்த திமுக ஆட்சியில் 12 லட்ச மதிப்பீட்டில்பேரூந்து நிறுத்தம் கட்டப்பட்டு,அதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் .இந்நிலையில் இந்த பேரூந்து நிறுத்தமானது, தகுந்த பராமரிப்பின்றி இருப்பதால் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது .
மேலும் தெருவில் நடமாடும் விலங்குகள் அசுத்தம் செய்வதால் ,மிகவும் அருவருப்பாக சுத்தமின்றி காட்சியளிக்கிறது .இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த இடத்தில் நிற்பதை தவிர்த்து வருகின்றனர் .
இதனால் கொளுத்தும் வெயில் காலங்களிலும் அல்லது கடும் மழை காலங்களிலும் பேரூந்து நிறுத்தத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .
எனவே தகுந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்து அசுத்தமாக காட்சியளிக்கும் பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தை உடனடியாக மறு சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அந்த வார்டு உறுப்பினரும் திமுக பிரதிநிதியுமான ஜனாப் . ஆட்டோ ஜபருல்லாஹ் அவர்களையும் ,பேரூராட்சி தலைவரும் அதிமுக பிரதிநிதியுமான திரு .கோ .அருணாச்சலம் அவர்களையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் அன்போடு கேட்டு கொள்கிறது .
குறிப்பு :இந்த பிரச்சினையை தமுமுக ,மமக ,TNTJ ,SDPI ,PFI ,முஸ்லீம் லீக் ,INTJ உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கையில் எடுத்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கோருகிறது .
ஆட்டோ ஜபருல்லா -9750223019 (வார்டு உறுப்பினர் )
கோ .அருணாச்சலம் -9842160292 (பேரூராட்சி தலைவர் )
தொகுப்பு :ஜே :ஷேக் பரீத்
0 comments:
Post a Comment