முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற அதிசய சம்பவம்



முத்துப்பேட்டை, பிப்ரவரி 26 : முத்துப்பேட்டையில் உள்ள SPKM தோட்ட வளாகம், மக்கா பள்ளிவாசல் அருகில் உள்ள VMS . நெய்னா முஹம்மது அவர்களின் வீட்டு தோட்டத்தில் அதிசய வாழை மரம் ஒன்று மரத்திற்கு நடுவில் பிளந்து கொண்டு வாழைத்தார் மற்றும் பூவுடன் வெளிப்படுத்தியது. அப்பகுதியில் இதனைக்கான பொது மக்கள் அனைவரும் வந்து அவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

சு.இனா. (எ) KSH சுல்தான் இப்ராஹீம்

காரைக்கால் ஜாமியா புஷ்ரா மகளீர் கல்லூரிக்கு உதவிட வாரீர்!


காரைக்கால், பிப்ரவரி 25 : கடந்த 20 ஆண்டுகளாக பெண்களுக்கு குர்ஆன், சுன்னா அடிப்படையில் இஸ்லாமிய கல்வியை போதித்து வருகின்றது. எந்த இயக்கத்தை சாராமலும் நல்லுள்ளம் கொண்டு முஸ்லிம் சகோதர சகோதரிகளின் மாதாந்திர சந்தா உதவியுடன் உள்ளூர் முஹல்லாவால் நடத்தப்பட்டு வரும் இதனால் பல்வேறு மாணவிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று தங்களுடைய ஊர்களிலேயே தனி மதரசக்காலை நடத்தும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கலூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட சில உபகரண பொருட்கள் தேவைப்படுகிறது.
(1 ) குளீர்காலங்களில் குளிப்பதற்கு வாட்டர் ஹீட்டர் 2 .
(2 ) கியாஸ் தட்டுப்பாடு எனில் இக்னீசியன் அடுப்பு.
(3 ) ஃபிரிஜ் - 1
(4 ) கிரைண்டர் - 1
(5 ) டெலிபோன் (காலர் ID ஸ்பீக்கருடன்)
(6 ) கம்பியூட்டர் & பிரிண்டர்
(7 ) மிக்ஸி
(8 ) மைக் செட் (ஆம்லிபார்)
எனவே நல்லுள்ளம் கொண்டவர்களே தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

தலைவர்: 98438 47277 . செயலாளர்: 94435 73462 . பொருளாளர்: 98431 25819.வளைகுடா நாட்டில் உள்ளவர்கள் தொடர்புக்கு லெப்பை: 0096599189521.

ஜெமீலா பர்வீன் காரைக்கால்.

source from: www.mttexpress.com
நமது நிருபர்

K.T. ராசிக் அஹமது

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பள்ளிவாசலில் இன்று போடப்பட்ட (ஸ்லாப்) மேல்தளம்.




முத்துப்பேட்டை, பிப்ரவரி 25 : முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இப்பள்ளி வாசலின் மேல்தளம் இன்று காலை 10 ௦ மணியளவில் அப்பள்ளியின் நிர்வாகிகள் தலைமையில் போடப்பட்டது. இதில் முத்துப்பேட்டை யை சேர்ந்த அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
sourcew from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மசாலா தொழிற்சாலைக்கு உடனடி ஆட்கள் தேவை..


முத்துப்பேட்டை, பிப்ரவரி 22 : முத்துப்பேட்டையில் உள்ள பிரபலமான கொய்யா மசாலா என்ற தொழிற்சாலைக்கு உடனடியாக கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
அனுபவமிக்க SALES REPRESENTATIVE (if any Degree), வயது 25 முதல் 40 வரை இருந்தால் நல்லது. மாத சம்பளம் 15,000 இதற்கு மேல் தங்களின் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் வழங்கப்படும்.மேலும் நல்ல அனுபவம் மிக்க VAN DRIVER தேவைப்படுகிறது. வயது 30 முதல் 45 வரை இருத்தல் வேண்டும். மாத சம்பளம் 6500 தங்களின் தகுத்திக்கு ஏற்ப அதிக சம்பளம் வழங்கப்படும்.மேலும் LADY SUPERVISOR (if any டிகிரி) வயது 30 முதல் 45 வரை இருத்தல் வேண்டும். மாத சம்பளம் 4000 முதல் அதற்கு மேலும் தங்களின் தகுத்திக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். இதில் திருத்துறைப்பூண்டி, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நாச்சிகுளம், எடையூர் மற்றும் மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு: முஹமது சாதிக்: 99944 92222, MAIL ID: koyyahmasala@gmail.com
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

காய்தே மில்லத் அவர்களின் ஆவணப்படம் குறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்டி...








சென்னை, பிப்ரவரி 21 :1972 ல் இறந்து போன காய்தே மில்லத் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பிரபல சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:

தமிழகத்தில் ஆவணப்படங்கள், குரும்படங்கள் என்கிற மாற்று ஊடகம் ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்பட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகளைப்பற்றி AK . செட்டியார் என்பவர் 1940 களிலேயே ஆவணப்படம் எடுத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கிலடங்காத ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்காகப் போராடிய அனேக தலைவர்களைப்பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன .பகத்சிங் முதல் பாரதியார் வரை பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைவர்கள் மட்டுமல்லாது கலை இலக்கிய தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு ஆளுமைகளின் வரலாறும் ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் நாம் வாழும் காலத்திலேயே நம்மோடு வாழக்கூடிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தனைபற்றயும் இந்திரா பார்த்த சாரதியைப் பற்றியும் கூட ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட நெரிய ஆவணப்பட வரலாற்றில் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப்பற்றியோ கலை இலக்கியத் தளத்தின் பங்களிப்பு செலுத்திய முஸ்லிம் ஆளுமைகளைப்பற்றியோ எந்த பதிவும் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் அதிர் வலைகளை ஏற்படுத்திய தந்தை பெரியாரைபற்றியும் தமிழக முதல்வராக இருந்து வரலாறு படைத்த காமராஜரைப் பற்றியும் திரைப்படமே எடுத்துவிட்டனர். இவர்களோடு சமகாலத்தில் அரசியல் நடத்திய கண்ணியத் தலைவர் காய்தே மில்லத் பற்றி ஒரு ஆவணப்படங்கூட இல்லாதது வேதனையாக இருக்கின்றது. இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் காட்சி வடிவில் ஒரு செய்தியை சொல்லுவதின் மூலம் ஏற்படக்கூடிய தாக்கம் அளவிட முடியாதது. காட்சி வடிவில் செய்யப்படும் ஓர் பதிவு மிக எளிதாகவும் விரைவாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விடுகிறது. திரைப்படம் எடுக்கும் அளவிற்கு அந்த ஊடகத்தைப் பற்றிய புரிதலும் வலிமையையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதால் காய்தே மில்லத் பற்றிய காட்சி வடிவம் எந்த பதிவும் இல்லை. திரைப்படம் தான் எடுக்க முடியவில்லை, ஓர் ஆவணப்படமாவது எடுக்கலாமே என்கிற ஆவலில்தான் அந்த முயற்சியில் இறங்கி இன்று காய்தே மில்லத் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

காய்தே மில்லத் ஆவணப்படம் உருவாக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன...?

காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்படம் உருவாக்க வேண்டும் என்கிற ஆவலைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்ட ஓர் தலைவர் என்பதால் அவரைப்பற்றிய எந்த ஓர் காச்சிப்பதிவும் இல்லை. அவருடைய நன்குரிப்புகலையும், புகைப்படங்களையும் வைத்த்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தந்து ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவும் நடக்கவில்லை. இந்த! அந்தா! என்று இழுத்தடித்ததை தவிர ஒரு துண்டு காகிதத்தைகூட அவர்கள் தந்து உதவ வில்லை.படம்பிடிக்க வேண்டும் என்று இறங்கிய நானும், பட உருவாக்கத்திற்கு தேவையான பொருளாதார செலவுகளை ஏற்றுக்கொண்ட சமுதாய புரவலர் ஒருவரும் விரகத்தி அடைந்தது தான் மிச்சம். காய்தே மில்லத் அவர்களைப்பற்றி 2 , 3 புத்தகங்களும் ஒரு மலரும் தான் அவரைப்பற்றிய ஓர் வரலாற்றுப் பதிவாக எங்களிடம் இருக்கின்றது.அவற்றைக் கொண்டு என் கோணத்தில், என் பார்வை யில் இன்னொரு புத்தகம் எழுத முடிமே தவிர காட்சி வடிவில் அவரது வரலாற்றை பதிவு செய்ய நான் என்ன செய்வது.? காட்சி வடிவில் பதிவு செய்ய வேண்டுமானால் அவரது அசைவுகள் ஒவ்வொன்றும் காட்சி வடிவில் வேண்டும். அதற்க்கு புகைப்படங்கள் தான் பெரிதளவும் பயன்படும். புகைப்படங்களை வைத்திருக்கும் அவரது வாரிசுகள் அவற்றை தர மறுக்கும் போது அதை வைத்து படமெடுப்பது? ஆனாலும் தொய்வடையாமல் எப்படியாவது காய்தே மில்லத் அவர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்கிற உறுதியோடு மாற்று வழிகளை கையாண்டு ஆவணப்படத்தை எடுத்து முடித்துள்ளோம். காய்தே மில்லத்தின் அரசியல் அசைவுகளை ஓவியங்களாக வரைந்து படத்தில் காச்சிப்படுத்தி உள்ளோம். அவரோடு அரசியல் நடத்திய ஆளுமைகளை சந்தித்து உரையாடி அவர்களின் கருத்துக்களின் மூலம் காய்தே மில்லத்தை நினைவு கூர்ந்துள்ளோம்.

காய்தே மில்லத் வாரிசுகள் ஒத்துழைக்க மறுத்தாலும் காய்தே மில்லத் உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இன்ஷா அல்லாஹ் மிகப்பெரிய வெளியிட்டு விழாவை நடத்தவும் உலகம் முழுவதும் ஆவணப்படத்தை திரையிடவும் , அதனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


சவூதி, பிப்ரவரி 20 : சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு, IATA TICKETING, STAFF, ACCOUNTANT, CLIENT ஆகிய பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. சம்பளம் சவூதி ரியால் 2000 - 2500 விருப்பம் உள்ளவர்கள் இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 22 சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர்: 72005 00225
source from: www.mttexpress.com , www.muthupettaiexpress.com
நமது நிருபர்

யாசர் சென்னை

சவூதியில் பொறியியல் படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு...


சவூதி, பிப்ரவரி 20 : சவூதி அரேபியாவில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. அதில் BE- ELECTRICAL, MECHANICAL, CIVIL ENGINEER இவைகளில் BE படித்தவர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மாத சம்பளம் சவுதி ரியால், 42 ,000 முதல் 70 ,000 வரை தங்க இடம், உணவு முற்றிலும் இலவசம். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 21 ,22 பிப்ரவரி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: யாசர் சென்னை : 72005 00225.
source from www.mttexpress.com
நமது நிருபர்
யாசர் சென்னை

மவுத்து அறிவிப்பு: "ஆய்ஷா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 20 : PKT ரோடு மர்ஹும் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் SK நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் காய்கறி கடை SK . சுல்தான் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் M . முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாரும், H . காதர் முஹைதீன், H . சர்புதீன் ஆகியோரின் சகோதரியும், SK . முஹம்மது அமீன், M . நெய்னா முஹம்மது, P . அமானுல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், ராஜா என்கிற K . முஹம்மது ஜியாவுதீன், நிசார் அஹமது, மைநூர்தீன், முர்சித் ஆகியோரின் பாட்டியாரும், ஹபீப்கான் பிரதர்ஸ் அவர்களின் மாமயுமாகிய "ஆய்ஷா அம்மாள்" அவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 .30 மணியளவில் குத்பா பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்
H . காதர் முஹைதீன்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் 19.02.2012 நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.





முத்துப்பேட்டை,பிப்ரவரி 20: போலியோ சொட்டு மருந்து (இளம்பிள்ளை வாத தடுப்பு) சிறப்பு முகாம் நேற்று 19.02.2012 நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பிறந்த குழைந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை போலியோ சொட்டு மருந்து ஊற்றுவது வழக்கம். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை நகரில் மதியலன்காரம், செம்படவன் காடு, முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரம், மற்றும் தர்ஹா ஆகிய இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நர்ஸ் அவர்கள், போலியோ சொட்டு மருந்து குறித்து அனைத்து தாய்மார்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது என்றும் சென்ற முகாமை விட இந்த முகாமில் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து பெற்றோர்கள் சொட்டு மருந்துந்தை போட்டு சென்றார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.நேற்று குழந்தைகளை அழைத்து வராத வீட்டிற்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடா இருப்பதாகவும் அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
source from: www.mttexpres.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

ANA . நவாப்

PFI நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் ஓர் பார்வை.






முத்துப்பேட்டை, பிப்ரவரி 19 : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 20 வரை நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் முதலாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சேவைகலையும் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இன்று நாடுமுழுவதும் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் சுத்தம் செய்யும் நாளாக அறிவிக்கப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI - யின் முத்துப்பேட்டை நகர தலைவர் ஜனாப். M . முஹம்மது மாலிக் அவர்கள், கடந்த 12 ஆம் தேதி PFI சார்பாக மக்களுக்கு உடல் திறன், உடல் ஆரோகியம், ஆகியவையின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று குட்டியார் ஜும்மாஹ் பள்ளி வாசலை சுத்தம் செய்யும் பணியை நடத்தினோம் என்றும், இது போன்று இந்தியா முழுவதும் அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளிவாயில்கள், மற்றும் பொது இடங்கள் ஆகிய இடங்களில் PFI - யை சேர்ந்த நாங்கள் சுத்தம் செய்து நாங்கள் வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். உடன் PFI - யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, PFI - யின் உறுப்பினர்கள்,கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி

முத்துப்பேட்டை அருகே உப்பூரில் மாட்டுவண்டி மீது மோதிய தனியார் பேருந்து.!!






உப்பூர், பிப்ரவரி 17 : ஆலங்காடு கடைத்தெருவை சேர்ந்த திரு. ஜெயராமன் வயது 45 இவர் ஒரு விவசாய். இவர் இன்று காலை உப்பூருக்கு வைக்கோல் எடுக்க தனது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஓர் தனியார் பேருந்து வரும்போது எதிர்பாராமல் விபத்துக்குள்ளானது. இதில் மாட்டு வண்டி ஓட்டி வந்த ஜெயராமன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு திவீர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு மாடுகள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
source from; www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை

மவுத்து அறிவிப்பு: "மஹபூபா அம்மாள் "


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : குண்டாங்குலத்தெரு, மர்ஹும் மந்திரிஷா மரைக்காயர் அவர்களின் மகளும், A . காதர் உசேன், A . ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயரிய தாயாருமாகிய "மஹபூபா அம்மாள் " அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

A . காதர் உசேன்

நமது நிருபர்

KM . கார் கனி (பாடகர்)

மவுத்து அறிவிப்பு: "ரஹ்மா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : தெற்குத்தெரு, பேட்டை ரோடு மர்ஹும் முஹம்மது மீராசா அவர்களின் மகளும், மர்ஹும் கு.கி சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் KSM செய்யது அலி அவர்களின் மாமியாரும் , M . ஹாஜா மைதீன் அவர்களின் மாமியும், கோல்டன் S . கிதுருமைதீன், கோல்டன் S . தம்பி மரைக்காயர், கோல்டன் S . ஜெகபர் அலி, ஆகியோரின் தாயாரும், S .தாதா சரீப், S .ஜாகிர் உசேன், S .அப்துல் ஆரீப், S .ஷாகுல் ஹமீது, T .ரிபாய்தீன், T . கபார்கான் ஆகியோரின் பாட்டியாருமாகிய "ரஹ்மா அம்மாள்" அவர்கள் இன்று கலை 11 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 .30 மணியளவில் அரபுசாஹிப் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

PAH . துல்கர்னே

நமது நிருபர்

KM . கார் கனி (பாடகர்)

IAS , IPS , IFS வெறும் கனவல்ல நிஜமே


இந்திய, பிப்ரவரி 16 : இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்:

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.UPSCயின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்துஅனுப்ப வேண்டும்.

பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாகரூபாய் 50 செலுத்த வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.. பட்டபடிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் முதல் நிலை தேர்வில் கனல்து கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் பொது, தேர்ச்சி பெற்ற கல்வி சான்றிதழ்களின்நகல்களை சமர்பிக்க வேண்டும். பட்டபடிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கபடுவர். அத்தோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்கள், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.

தேர்வு நடைமுறை :

இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை(Preliminary) தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கபடுகிறார்கள்.

முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் “ஜெனரல் ஸ்டடீஸ்(General Studies) எனப்படும் பொது அறிவு தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்று உள்ளன. தேசிய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், சுற்றுசூழல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Services Aptitude Test – CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருந்து வந்த விருப்பப்பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் Comprehension, Communication Skills, Inter Personal Skills , Logical Reasoning, Decision Making & Problem Solving,, General Mental Ability, English Language Comprehension Skills என்று பாடத் திட்டமே லேசாகபதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனிபோடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200.

ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்தஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும்தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்கமுடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில்வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும்ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையைவிட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாகஒரு பிரச்சினைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில்மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிகஉணர்ச்சிவயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா, சட்டத்தைமட்டும் கடுமையாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரேஅளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள்.

இதன்மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவனங்கள் தரும் குறிப்புகளை மட்டும்ஆண்டுக்கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல்வடிகட்டப்படுவார்கள். மருத்துவம்படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம்எனும் ஒரே அளவுகோலில் தான் பரிசோதிக்கப்படுவார்கள். ஆரம்பக் காலத்தில்கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்விபயின்றவர்களுக்கும் CSAT தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான்.அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்!

அரசுமற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வுமுறைக்குத்தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டுதற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள்.இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களிலிருந்தே இந்தியில் விருப்பப்பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநிலமாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள்ஆங்கிலத்திலும்,இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.

முக்கிய தேதிகள்: 2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012 , பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012 , தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012 .

தொகுப்பு

source from: www.mttexpress.com
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை VSR நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை!!





முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் VSR நகைக்கடை என்ற பெயரில் திரு.யோகேஸ்வரன் என்பவர் சுமார் 15 வருடமாக கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை வழக்கம்போல அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று 16 .02.2012 காலை 6 மணியளவில் கடைவளியாக டி சாப்பிடுவதற்கு வந்த யோகேஸ்வரன் அவரின் கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரின் கடை கதவு உடைக்கப்பட்டு கடையில் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டனர். அப்போது பொலிசார் கூறுகையில் இந்த செயலை தனி நபர்கள் யாரும் செய்ய வில்லை என்றும் கும்பல் கும்பலாக பல்வேறு திருட்டுகளை முத்துப்பேட்டை நகரில் செய்து வருகிறார்கள் என்றும் விரைவில் அவர்களை நாங்கள் பிடித்து விடுவோம் என்றும் அப்போது தெரிவித்தனர். மேலும் கூறுகையில் திருடர்கள் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி திருடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் இதில் சம்மத்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவைகளை வரவழைக்க இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இக்கடையின் நிறுவனர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், முத்துப்பேட்டை நகரில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் திருடர்கள் இவற்றை பயன்படுத்தி கொள்ளை அடிக்க துணிகிறார்கள். இதனால் வர்த்தகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாகவே இருந்து வருகிறது. எனவே இவற்றை உடனே தமிழக அரசு தடை இல்லாத மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தால் வர்த்தகம் செய்ய இலகுவாக இருக்கும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், வழக்கறிஞர் தீன் முஹம்மது, K . எர்சாத் அஹமது

எலுமிச்சை பழத்திலிருந்து மிசாரம்: முஸ்லிம் மாணவன் சாதனை...


குற்றாலம், பிப்ரவரி 16 : குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார். இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:- "எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன். அப்போதுதான் புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது. மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்." இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அசாருதீன் முஹம்மது ஆரிப்

TNTJ சார்பில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்..



திருவாரூர், பிப்ரவரி 15 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் 7 சதவீதமும் மாநிலத்தில் 10 சதவீதமும் இட ஒதிக்கீடு கிடைக்க வழியுறுத்தி திருவாரூரில் நேற்று மாபெரும் வாழுரிமை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய உரிமையை கேட்க போராடினார்கள்.
source from: www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com, www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டையில் அகல ரயில்பாதை அமைக்க SDPI நடத்தும் ரயில் மறியல் போராட்டம்.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 15 : முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கிய தீர்மானமாக திருவாரூரிலிருந்து, காரைக்குடி வரை அகல ரயில்பாதை திட்டத்தை உடனே அமைக்க கோரி வருகின்ற 26 .02 .2012 அன்று மதியம் 2 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசு ஊழியர்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது

காதலர் தின சீர்கேட்டால் சிக்கித்தவித்த இஸ்லாமிய பெண்கள்..!!!




உலகம், பிப்ரவரி 15 : கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிளக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதாரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது;அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243 .
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும்ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது,அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test)நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது.
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும்கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 ம் நம்மை பொறுத்தவரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும்உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல்எல்லா நேரங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்டவேண்டும்.
source from www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்
TR .அப்துல் ரஹ்மான், T .அப்பாஸ்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்


உலகம், பிப்ரவரி 14 : வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது
.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்
.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நமது நிருபர்

சுல்தான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)