முத்துப்பேட்டை,செப்டம்பர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யில் நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 7 வது வார்டு கவுன்சிலராக தே.மு.தி.கா.சார்பாக போட்டி இட போவதாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு ஓவன என்கிற LMO .ஹபீப் கான் பேட்டியளித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், என்னுடைய பனி 7 வது வார்டு மக்களுக்கு நல்ல முறை யில் பணியாற்றுவேன் என்றும், அரசாங்கம் தரக்கூடிய உதவிகளை ஏமாற்றாமல் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்றும், மேலும் அரசாங்கத்தின் பணத்தை எதிபார்த்து பணியாற்ற மாட்டேன் என்றும் என்னுடைய பணத்தை என்னுடைய வார்டு மக்களுக்கு கொடுத்து உதவி செய்வேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் எனது வார்டை மிக சுத்தமாகவும், சுகதரமகவும் பேணி காக்குவேன் என்றும் அவர் கூறினார்.
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்
ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS அப்துல் பாரி, EK . முனவர் கான்
0 comments:
Post a Comment