முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப் பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக துபாய் மண்டல பொறுப்பளார் ஜனாப் யூசுப் சுகைல் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமை மக்கள் கனநிப்பின் மாநிலத் தலைவர். பசீர் அஹ்மத், பல தியாகங்களை செய்திருக்க கூடிய அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து ஒருத்தியாக செயல் பட்டு வெற்றிக்கனியை பெற வைத்திட அனைவரும் பாடுபட வென்றும் என்று உரை நிகழ்த்தினர். அதற்கு பிறகு பேசிய ம.செ. பாவா பஹுருதீன் அவர்கள் இது சாதாரண விஷயம் அல்ல தேர்தல் என்றால் என்பது திருவிழா என்பார்கள் அனால் நம்மை பொருத்தவரையில் மிக கடினமாக உழைத்து முயற்ச்சி செய்யகூடிய ஒரு போராட்டக் களம் அதை நம்மளுடைய தியாகத்தின் அர்பணிப்பு பொறுத்துதான் வெற்றி என்பது தீர்மானிப்பது, நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிக எளிதாக இருக்கின்றது. ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம் என்று கூறினார். பின்னர் இன்னகழ்ச்சி முடிவின்போது சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் நன்றிவுரை கூறி நிறைவு செய்தார். இதில் தர்ஹா மேனேஜிங் டிரஸ்ட் தலைவர். ஜனாப் SS .பக்கர் அலை சாகிப் அவர்கள். SDPI மாநில தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா. SDPI ம.செ. பாவா பஹ்ருதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், து. த. பாசித், ந.இ.செ.நிஜாம், நகர பொறுப்பாளர், நிசார், தமீம் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Source from muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்
முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment