முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கரை சேவைக்கு அல்ல, இறை சேவைக்காக ஓர் யாத்திரை! SM .பாக்கர் அவர்கள் பேட்டி...




சென்னை, நவம்பர் 18 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருகிற 19 .11 .2011 ஆம் தேதி மேலப்பாளையத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை நடத்த உள்ளதாக இயக்கத்தின் மாநில தலைவர் ஜனாப் .SM .பாக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர், ஜனாப் .SM .பாக்கர் அவர்களை நேரில் சந்தித்து சில வினாக்களை தொடுத்தனர். இதன் பின்னர் பதிலளித்த அவர், பாபரி மஸ்ஜித் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை என்றும், ஆனால் இந்த பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், அனைத்து மக்களும் ஓரணியில் ஒன்று சேர்ந்து போராடினால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை கூட நம்மால் மாற்றி விட முடியும் என்றும், ஏனெனில் இது ஓர் ஜனநாயக நாடு என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு ஓர் உதாரணம் சென்ற சாபான் வழக்கின் தீர்ப்பை கூட நமக்கு சாதகமாக மாற்ற முடிந்தது, ஏனெனில் நாம் அனைவரின் ஒற்றுமை அங்கு நிலைத்திருந்தது தான் காரணம். மேலும் இந்த பிரச்சனை ஓர் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது என்றும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை ஓர் நினைவு நாளாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த பிரச்சனை ஒரு தலைமுறைக்கு என்னவென்று தெரியாமல் போய்விட்டது. நியாய உள்ளம் படைத்த நமது தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற இந்துக்கள் மற்றும் கிருஸ்தவ மக்களிடமும் நம்முடைய நீதி மறுக்கப்பட்டதை நாம் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். பாபரி மசூதி கட்டப்பட்டது என்பதும், இடிக்கப்பட்டது என்பதும் இதிகாசமோ, புராணமோ அல்ல இது ஓர் உலக வரலாற்றினுடைய குறிப்பீடு என்றும், இது நிகழ்கால உண்மை இவற்றை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கற்பனையை உண்மையாக்க முயல்வோர் மத்தியில் உண்மை, நேர்மை, சத்தியம் ஆகிய இந்த வரலாற்றுச் சுவடுகளை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எடுத்துச்சொல்லி நீதியை நிலைநாட்ட, பாபரி பள்ளியை மீட்க இந்த பயணம் புறப்படுகிறதே தவிர, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், மற்றும் அனைத்து ஜாமாத்தார்களும் தள்ளி நின்று வாய்ப்பொத்தி மவ்ளிகலாக வேடிக்கை பார்கின்ற போது களத்தில் இறங்கி உண்மையை சொல்லவதும், இறைப்பள்ளியை மீட்பதும் ஒவ்வொரு நம்பிக்கையாளரின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரதயாத்திரை கரசேவைக்காக அல்ல என்றும், இது ஓர்
இறைச் சேவைக்காக அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜாமாத் என்றும் அவர் தெரிவித்தார். இது நடக்குமா? இது நம்மால் முடிமா? இவர்களை அரசாங்கம் அடக்கிவிட மாட்டார்களா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு மத்தியில் அஞ்சுவதும், அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்குத்தான் என்வது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை தத்துவம் என்றும், தடைசெய்தால் உடைத்தெறிவோம், சிறை சென்றேனும் இறைசேவை செய்வோம் என்று உங்களை அழைக்கிறது INTJ என்று அவர் தெரிவித்தார்.



சென்னை சேலையூரிலிருந்து INTJ வின் தலைமை அலுவலகம் வந்து இந்த ரதயாத்திரைக்காக ரூ.5 ,000 காசோலையை கொடுத்துவிட்டு தானும் இந்த ரதயாத்திரையில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிய 70 வயது முதியவரின் பெயர் சீனி முஹம்மது அல்ல "சீனிவாசன்" என்பதே இதற்க்கு ஓர் அத்தாட்சி.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)