முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழக அரசின் விலை ஏற்றத்தால் தவிக்கும் மக்கள்கள்!!!



சென்னை, நவம்பர் 18: தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து தற்போது ஓர் அளவு குறைந்துள்ளது.தற்பொழுது அனைத்து உபயோகிக்கும் பால் விலை அதிகரித்துள்ளது.இதே போன்று பேரூந்து கட்டனும் அதிகரித்துள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்ந்துள்ளது.அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.சென்னை மாநகரை தவிர பிற நகரங்களில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 7 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயருகிறது.சென்னையில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 12 லிருந்து ரூ. 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால் விலையும் உயர்வு பேருந்து கட்டண உயர்வை அடுத்து பால் கொள்முதல் விலைகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.இதன் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.24 க்கு விற்க்கப்படும்.இது அட்டைதாரர்களுக்கும் பொருந்தும்.பசும்பால் கொள்முதல் விலை ரூ.18 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.எருமை பால் கொள்முதல் விலை ரூ.26 லிருந்து ரூ.28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வராக பதியேற்றயுடன் டெல்லி சென்று தமிழக வளர்ச்சிக்காக கணிசமான நிதி பெற்று வந்த ஜெயலலிதா தற்போது மக்களின் அத்தியாவசியமான பால் மற்றும் பேருந்து கட்டணங்களை உயர்தியுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் மின்சார கட்டணங்களை உயர்த்த, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விரைவில் மின்சார கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசு முடிவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.இதனால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)