முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை:இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கொடி கட்டியதால் பரபரப்பு



முத்துபேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டையில் நாளை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஊர்களிலிருந்து லச்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும், இதில் மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை, பேட்டை சாலை, ஆகிய இருபுறங்களிலும் வண்ண விளக்குகளும், டீப்லைடுகளும், இஸ்லாமிய கோடி தோரணங்களும், விளம்பர போர்டுகளும் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளனர். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வரை இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கோடியை நேற்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடியை பொதுமக்கள் காலையில் பார்த்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏதும் நிலவாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பொது மக்களிடம் விசாரித்ததில் இன்று BJP - யின் தெருமுனை பிரச்சாரம் நாடக்க உள்ளதாகவும் இந்த பிரசாரத்திற்கு BJP யின் மாநிலத்தலைவர் H .ராஜா வருவதாகவும் விசாரித்ததில் தெரிய வருகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexppress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, முஹைதீன் பிச்சை, சுபைத் கான், மர்சூக் அஹ்மது, TR .அப்துல் ரஹ்மான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)