முத்துப்பேட்டை, டிசம்பர் 05: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு சாலை இருபுரத்தையும் அகலபடுத்தி பல லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் வடிக்கால் நீர் அமைக்கப்பட்டன.ஆனால் எதோ காரணத்தால் அந்த பணியை பாதியோடு நிறுத்திவிட்டனர். இதனால் கழிவு நீர் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதுடன் மட்டுமல்லாமல், கொசுக்கள், புழு போன்ற கிருமிகள் ஆகியவைகளின் கூடாரமாக அமைந்துள்ளது. மேலும் அவ்வழியில் செல்லும் அனைத்து மக்களும் தங்களுடைய மூக்கை பொத்திக்கொண்டு தான் செல்லுகின்றனர். மேலும் அந்த இடத்தில் நின்றால் மயக்கமே வரும் அளவிற்கு அந்த இடம் மோசமாக காட்சியளிக்கிறது . பாதி வேலை நிறுத்தப்பட்ட இந்த கழிவு நீர் வடிக்கால் நாளுக்கு நாள் அதன் தடுப்பு சுவர் இடிந்து முழுவதும் சேதமாகி உள்ளதால் பொது மக்கள் நடப்பதற்கும், வாகனங்கள் செல்வதற்கு இடையூராகவும், வியாபாரிகளுக்கு மிகவும் துன்புருத்தலாகவும் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் அலட்சியமாகவும், செவிடர்களாகவும் இன்றுவரையும் இருந்து வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் ஒரு துண்டு பிரசுங்கத்தை நோய்களை தந்தமைக்கு நன்றி என்று வெளியிட்டுள்ளனர்.இந்த துண்டு பிரசுங்கத்தை படிப்பவர்கள் வெறும் காமடியாகத்தான் இருக்கிறது என்றும் மக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்து வருகிறது. உள்ளாட்சி யின் நோக்கம் சாலை வசதி, தெருவிளக்கு, சுகாதாரம் ஆகியவைகளை சுத்தமாக வைப்பது தான் பேரூராட்சியின் வேலை இவற்றை பார்த்தாவது சீர் செய்வார்கள பேரூராட்சி மன்றம் பொறுத்திருந்து பார்போம்.
மக்கள் வெளியிட்ட துண்டு பிரசுரம் உங்கள் பார்வைக்கு கீழே:
தொகுப்பு
ரிப்போர்ட்டர் M . முஹைதீன் பிச்சை
முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவ வாய்ப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment