சேலம், டிசம்பர் 06 : மசூதியின் மீது 40 அடி கோபுரமும் (மினாரா), அதன் மீது 3 அடி தங்கத்தகடுகளால் மூடப்பட்ட கலசமும் இருக்கும் அபூர்வமான மசூதியை காண வேண்டும் என்றால், சேலம் நகரில் மையப்பகுதியில் உள்ள முகமதுபுறா தெருவுக்கு சென்றால் போதும். இங்குள்ள நூறு ஆண்டுகள் பழமையான மசூதியில் தான் இப்படிப்பட்ட அபூர்வம் இருக்கிறது. இதுபோன்ற தங்க கோபுரம் (மினாரா) தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள். தான் மட்டும் இப்படி ஓர் மசூதியை கட்டியதாக யாரும் கருதிவிடக்கூடாது என்று நினைத்த பிரபல தோல்வணிகரான ஜமால்மொய்தீன், இப்பகுதி இஸ்லாமிய மக்களிடமிருந்து அவர்களால் முடிந்த வெள்ளிக்காசுகளை தருமாறு சொல்லி, அவையனைத்தையும் கலசத்தின் அடிப்பகுதியில் கொட்டி, மசூதியை பொது சொத்தாக மாற்றிவிட்டார் என்பது வரலாற்று சான்றாக உள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நன்றி - ராஜேந்திரன் (தினகரன்)
நூறு ஆண்டு பழமை வாய்ந்த சேலம் மசூதியில் தங்க கலசம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment