முத்துப்பேட்டை, டிசம்பர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு ஆகியவை குறித்து திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் SDPI -யின் முத்துப்பேட்டை நகர அலுவலகத்தில் நேற்று மலை 7 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI - யின் மாநில செயலாளர் சித்திக் மச்சான் என்கிற ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முத்துப்பேட்டை SDPI -யின் சார்பில் வருகிற 11 .12 .2011 ஆம் தேதியன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டமும், நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட SDPI கட்சியின் வேட்பாளர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்களை இரண்டாம் நிலைக்கு கொண்டு வந்த முத்துப்பேட்டை மக்களுக்கு நன்றி அறிவிப்பு செய்ய உள்ளாதாகவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதே தேதியில் SDPI -யின் மாநில தலைவர் ஜனாப். KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்களைக் கொண்டு முத்துப்பேட்டையில் உள்ள 6 இடங்களில் கொடி ஏற்று நிகழ்ச்சியும் நடத்த உள்ளதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் SDPI -யின் மாவட்ட செயலாளர். ஜனாப். பாவா பகுருதீன், கட்சியின் நகர தலைவர். ஜனாப். M . ரஹ்மத்துல்லாஹ், நகர செயலாளர் ஜனாப். A. முஹம்மது முஹைதீன், நகர இனைச் செயலாளர் ஜனாப். நிஜாம், நகர கமிட்டி ஜனாப். நிசார் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா
முத்துப்பேட்டையில் SDPI சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment