முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய்.!



முத்துப்பேட்டை,மே 29 : முத்துப்பேட்டையில் ஒன்றிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும்,உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவிற்கு இருத்தல் வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருத்தல் வேண்டும். புதிய மருத்துவமனை கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும், பிரேத பரிசோதனை செய்யும் வசதியை மீண்டும் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் பி.மீனம்மாள்தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கி அகில இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு உறுப்பினர் ஆர்.தமிழ் செல்வி ராஜா பேசியதாவது, இன்று நடைபெற்ற இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும் இந்த பகுதிக்கு முக்கியமானதாகும் என்றும், தமிழகத்தில் உள்ள சுகாதாரங்களில் உள்ள அவலங்கள் உயிர் காக்கும் மருந்துகள் எந்த நேரமும் இருப்பு வைத்திருக்க மாட்டார்கள் என்றும் இதனால் தமிழக மக்கள் அதிகம் நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் ஆப்போது அவர் தெரிவித்தார். இதால் அனைத்து மக்களையும் பாண்டிசேரி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள் அதில் சிகிச்சை பெரும் தமிழக மக்கள் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது என்றும் அவர் தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு எதார்த்தமாக திருத்துறைப்பூண்டி உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டோம். அங்கு நிறைமாத கர்பிணிப் பெண் சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு வளாகத்தில் உள்ள சுகாதார நிலயம் அவல நிலையில் உள்ளதை கண்டு நாங்கள் மன வேதனை அடைந்தோம் என்றும், இந்த அவல நிலையை தடுக்கத்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சுகாதார நிலையத்தை அமைத்துள்ளது. இவற்றை முறையாக அரசு கடைபிடிக்க வேண்டும் என்று வலியுருத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார். இதில் ஒன்றிய பொருளாளர் பரமேஷ் வரி, ஒன்றிய துணைச் செயலாளர் வி.நிர்மலா, ஒன்றிய துணைத்தலைவர் ராணி, இ.கம் ஒன்றிய தலைவர் முருகையன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)