முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
AKLT.அப்துல் ரஹ்மான்,
முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment