முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..







முத்துப்பேட்டை, ஜூலை 29 : முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையில் நேற்று மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் S.S. பாக்கர் சாஹிப் தலைமை வஹித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு நோன்பு திறந்தார், அப்போது அவர் பேசியதாவது. இந்த நோன்பில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு மாதா காலம் தங்களின் உடலை வர்த்தி நோன்பு இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றும், மேலும் இந்த சகோதரர்களிடம் கலந்து கொண்டு நோன்பு திறப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாதி, மதம் பாராமல் தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. என் ரமலான் மாதத்தில் கூட 2000 பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காட்ச அரிசி வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் சுற்றுலா தளமான லாகூன் பகுதிக்கு விரைவில் நிதி வழங்கப்படும் என்றும் மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அனைவரும் காலம் முழுவதும் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி, அம்பிகாபதி, ஒன்றிய kulu தலைவர் R.K.P. நடராஜன், கோட்டூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜீவானந்தம், அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வி.என்.சண்முகம், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம், வர்த்தக கழகத் தலைவர் ராஜாராம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செம்பை ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஹைதீன் அடுமை, ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தர்ஹா டிரஸ்டி தமீம் அன்சாரி வரவேற்று பேசினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான்,

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)