முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை செம்படவான்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் பாகாம்பிரியாள் (20) இவர் தஞ்சாவூர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகே உள்ள குளத்திற்கு சென்றபோது 6 இளைஞர்கள் பாகாம்பிரியாளை கிண்டல் செய்துள்ளனர்.
உடனே பாகாம்பிரியாள் இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பாகாம்பிரியாளை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாகாம்பிரியாள் கொடுத்த புகர் அடிப்படையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மிச்வர்கான் (18), எர்சாத் அஹ்மத் (18) இருவரையும் கைது செய்து மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள 4 இளைஞர்களையும் பொலிசார் தேடிவருகின்றனர்.
தொகுப்பு:
J. பரக்கத்து நிஷா
0 comments:
Post a Comment