சென்னை,ஜூலை 02: தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்து. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்தற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வோடு இரண்டற கலந்திருக்கும் மஸ்ஜித்,மஹல்லா ஜமாஅத் இவைகளின் கண்ணியத்தை ஒற்றுமையோடு நிலை நிறுத்த அயராது பாடுபட்டு வரக்கூடிய பேரியக்கமான தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதி வக்ப் நிர்வாகத்திற்கு தேர்வாகி இருப்பது ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹல்லா ஜமாத்துக்களில் ஏற்படும் பிரச்சினைகள்,நிர்வாகத் தேர்தல்களில் குளறுபடிகள், அதிகாரங்களை பயன்படுத்தி வக்ப் சொத்துக்களை தாரை வார்ப்பது போன்ற நிலைகள் இனி நிகழாது என்கிற நம்பிக்கை சமுதாய மக்களுக்கு மிளிர்ந்திருப்பதை வரக்கூடிய தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
புதிதாக வக்ப் வரிய நிர்வாகத்தில் அடியெடுத்து வைத்துள்ள நமது சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் சமுதாயம் எதிர்பார்க்கும் பங்களிப்பை சிறப்பாக வழங்க நெஞ்சார வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment