முத்துப்பேட்டை, செப்டபர் 18: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. இந்து முன்னணி சார்பில் 21 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஊர்வலத்தில் தில்லைவிளாகம், வடக்காடு, கல்லடிக்கொல்லை, செங்கங்காடு, உப்பூர், மங்களூர், கீலனமங்குரிச்சி, மருதங்கவெளி உட்பட இடங்களிலிருந்து சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலம் ஜாம்புவோனோடை வடகாட்டிளிருந்து புறப்பட்டு தர்கா மேலக்காடு கோரையாறு பாலம் வழியாக ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை ரோடு பங்கலாவாசல், செம்படவங்காடு, வழியாக பாமினி ஆறு சென்று கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 12 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஊர்வலத்தில் தில்லைவிளாகம், வடக்காடு, கல்லடிக்கொல்லை, செங்கங்காடு, உப்பூர், மங்களூர், கீலனமங்குரிச்சி, மருதங்கவெளி உட்பட இடங்களிலிருந்து சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலம் ஜாம்புவோனோடை வடகாட்டிளிருந்து புறப்பட்டு தர்கா மேலக்காடு கோரையாறு பாலம் வழியாக ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை ரோடு பங்கலாவாசல், செம்படவங்காடு, வழியாக பாமினி ஆறு சென்று கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 12 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருச்சி ஐ.ஜி. ராமசுப்ரமணியம் தலைமையில் தஞ்சை டி.ஐ.ஜி.அமல் ராஜ் மேற்பார்வையில் திருவாரூர் எஸ்.பி. காளிராஜ் மகேஷ் குமார், தஞ்சை எஸ்.பி. தர்மராஜன், நாகை எஸ்.பி. சி.பி. சக்ரவர்த்தி, அரியலூர் எஸ்.பி. ஜாவுல் ஹக், தலைமையில் 50 டி.எஸ்.பி. 100 இன்ஸ்பெக்டர், 200 சப் இன்ஸ்பெக்டர் உட்பட சுமார் 3000 த்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலவரத்தை தடுப்பதற்கு ஏராளமான வஜிரா வாகனம், கண்ணீர் புகை வாகனம், தீ அணைப்பு வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
முத்துப்பேட்டையில் இந்துக்களும் ,முஸ்லீம்களும் பழங்காலந் தொட்டே அண்ணன் தம்பிகளாகவும் ,மாமன் மச்சான் களாகவும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வருகின்றனர் .இதனை பொறுக்க முடியாத இந்துமுன்னணி ,ஆர் எஸ் எஸ் போன்ற மதவாத தேசவிரோத ,கும்பல்கள் வருடாவருடம் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர் .
இவர்கள் நடத்தும் இந்த வன்முறை ஊர்வலத்திற்கு முத்துப்பேட்டையில் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்ற காரணத்தினால் வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்
.இந்த ஊர்வலத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு தாராளமாக சாராய சப்ளை செய்யப்பட்டு ,இஸ்லாமியர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படுகிறார்கள் .இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் உதவியால் சர்ச்சை குள்ளான பகுதியான பங்களா வாசல் வழியாக பேட்டைவரை நடந்துகொண்டிருந்த வழித்தடத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது உயர்நீதி மன்றம் .
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் -ஊர்வலம் சரியாக 4.30 மணிக்கெல்லாம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை கடந்துவிட வேண்டும் என்றும் ,வணக்கஸ்தலங்கள் அருகில் ஊர்வலம் செல்லும் போது வெடி வெடிப்பதோ ,மேல தாளங்கள் முழங்குவதோ ,கூடாது என்றும் -பிற மதத்தவரை புண்படுத்தும் கோஷங்கள் போடுவதோ கூடாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது .
ஆனால் இந்த உத்தரவுகளை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் "இந்தியா இந்து நாடு" பத்து காசு முறுக்கு -பள்ளிவாசலை நொறுக்கு என்றும் சட்ட விரோதமான கோஷங்களை எழுப்பி சென்றனர் .இதுமட்டுமில்லாமல் வழக்கத்திற்கு மாறாக சரியாக நான்கரை ,ஐந்து மணிக்குள்ளாக பழைய பேருந்து நிலையம் ,பங்களா வாசல் பகுதிகளை கடக்காமல் ,சரியாக 8 மணிக்குத்தான் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர் .
இது உயர்நீதி மன்ற உத்தரவிற்கு எதிரானதாகும் .வருடாவருடம் இவர்கள் நடத்தும் இந்த அராஜகத்தை முத்துப்பேட்டையில் வாழும் முஸ்லீம்கள் மட்டுமல்ல ,மனிதநேயத்தை ,மதநல்லிணக்கத்தை விரும்பக்கூடிய இந்துக்களும் வன்மையாக கண்டிக்கிறார்கள் . முத்துப்பேட்டையில் மட்டுமல்ல இந்த நாடு முழுவதுமே அமைதியும் ,மதநல்லிணக்கமும் நிலவ வேண்டுமானால் ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி ,பாஜக போன்ற மதவாத ,தேசவிரோத ,பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்படவேண்டும் .
தொகுப்பு :ஜே.ஷேக்பரீத்
0 comments:
Post a Comment