முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருச்சியில் பாஜக வினரே பேனரை கிழிக்கின்றனர் -மகஇக சந்தேகம்

நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.

இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான

தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

1 comments:

  1. பேனர் எண்ண காவி டவுசரும் கிழிஞ்சு போச்சாம். இவனுங்களுக்கு இது தேவையா தலவணை குஜராத்திலிருந்து வர வைத்து இவனுங்களே கேவல படுத்தி அணுப்பிட்டாணுங்க, குஜராத்திலயே அவனுங்க பருப்பு வேக மாட்டேங்குதாம் பிண்ண எப்படி தமிழ் நாட்டில். கேடி மோடி சீக்கிரம் புழல் சிறைக்கோ அல்லது தீகார் சிறக்கோ போகும் நாள் வெகு விரைவில். இண்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)