டிசம்பர் 28: முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டுக்கு 8 வாகனம் சென்றதில் நூரா என்ற வாகனம் ஒரத்தநாட்டுக்கு அருகில் புலவன்காடு என்ற ஊருக்கு அருகே சென்ற போது வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டு விட்டது.
இதில் வாகனத்தை ஓட்டிய சலீம் என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. மற்றும் அதில் பயணம் செய்த யாசர், சஃபான் இவர்களுக்கு காலில் தையல் போடும் அளவுக்கு கிழித்துவிட்டது.
நூர்தீன் மற்றும் நூர்தீன் மகன், ஹாஸ்பாவ மகன் தமீம் இவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. யாசர், சஃபானுக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்யபட்டுள்ளது. டிரைவர் சலீம்மை தஞ்சை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடக்கிறது.
0 comments:
Post a Comment