முத்துப்பேட்டை, பிப்ரவரி 02: முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் முகமது கலந்தர் (வயது25). இவர் மீது 2011–ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீசார் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முகமது கலந்தர் கோர்ட்டில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கிஇருந்த முகமது கலந்தர் நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று முகமது- கலந்தரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
0 comments:
Post a Comment