முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நடிகர் கிருஷ்ணா திருமணத்தில் யுவன் சங்கர் ராஜா அருகில் இருந்த முஸ்லிம் பெண் யார்.?!

தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான நடிகர் கிருஷ்ணாவுக்கும், கோவையைச் சேர்ந்த கைவல்யாவுக்கும் கோவையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.

Krishna wedding - Who is a muslim lady among with yuvan shankar raja

நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலமே திரண்டு வந்து வாழ்த்தியது. இதில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யுவன் சங்கர் ராஜா. அவர் முஸ்லிமாக மாறிவிட்டார் என்ற தகவல் பரவியிருந்த நேரத்தில் அவரது வருகை முக்கியமாக பார்க்கப்பட்டது. செய்திகளில் வந்தது போன்று அவர் தாடி எதுவும் வைத்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கான தனித்த அடையாளம் எதுவும் இன்றி நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை அணிந்து வழக்கம்போல எளிமையாக வந்திருந்தார். ஆனால் முகத்தில் உற்சாகம் இல்லை. வந்தவர் மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திவிட்டு சிறிது நேரம் மேடையில் நின்று கொண்டிருந்தார்.

அவர் அருகில் சிகப்பு நிறத்தில் துப்பட்டா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி யுவனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். யுவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணா? அல்லது அந்த பெண்ணின் உறவுக்கார பெண்ணா அவர் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள்.

இதுபற்றி சில பத்திரிகையாளர்கள் விஷணுவர்த்தனிடம் கேட்டபோது "அவர் எனது நண்பர்களில் ஒருவர் அவ்வளவுதான்" என்று சுருக்கமாக சொல்லிவிட்டு திருமண வேலைகளில் பிசியாகிவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் எதுவும் பிடிபடாமல் சந்தேகத்தோடு சென்றனர். இதனால் வரவேற்பு நடந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 comments:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)