முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள் இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்டவர்களை தடுத்தும் பயனில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் யாரும் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெறுத்துப்போன பள்ளி தலைமையசிரியர் ராமலிங்கம் நீங்கள் மிகவும் நல்லவர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இரைடயூறாக தயவு செய்து இங்கே வாகனங்களை நிறுத்தாதீர் என்று ஒரு விளம்பர போர்டை பள்ளி முகப்பு கேட்டில் மாட்டி உள்ளார். அதன் பிறகு வாகனங்கள் நிறுத்துபவர்கள் இந்த பக்கம் வருவதில்லை. தினமும் பள்ளி திறக்கும் நேரத்தில் அந்த விளம்பர போர்டை மாட்டி விடுவதும் பிறகு பள்ளி நேரம் முடிந்ததும் எடுத்து பள்ளிக்குள் வைத்துக் கொள்ளும் நடைமுறையை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது.
0 comments:
Post a Comment