திமுக
கூட்டணியில் அங்கம் வகிக்கும்
இந்தியன் யூனியன் முஸ்லீம்
லீக் மற்றும் மனிதநேய மக்கள்
கட்சி தங்களது வேட்பாளர்
பெயர்களை அறிவித்துள்ளது
.
திமுக
தலைமையிலான ஜனநாயக முற்போக்கு
கூட்டணியில் விடுதலைசிறுத்தை
கட்சிக்கு 2
தொகுதிகளும்
,புதிய
தமிழகம்,இந்திய
யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும்
மனித நேய மக்கள் கட்சி ஆகிய
கட்சிகளுக்கு தலா 1
தொகுதிகளும்
ஒதுக்கப்பட்டன .
ஏற்கனவே
போட்டியிட்டு வெற்றிபெற்ற
சிதம்பரம் தொகுதியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவனும் ,தென்காசி
தொகுதில் புதிய தமிழகம்
கட்சியின் நிறுவனர் டாக்டர்
கிருஷ்ணசாமியும் போட்டியிட
உள்ளனர் .
இந்நிலையில்
திமுக கூட்டணியில் அங்கம்
வகிக்கும் இந்திய யூனியன்
முஸ்லீம் லீக் கட்சி மற்றும்
மனிதநேய மக்கள் கட்சி,
தங்களின்
வேட்பாளரின் பெயர்களை இன்று
அறிவித்தது .
அதன்படி,
ஏற்கனவே
இந்திய யூனியன் முஸ்லீம்
லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற அப்துல் ரஹ்மான்
வேலூர் தொகுதியில்
போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின்
தலைவர் KM
.காதர்
மொஹைதீன் சென்னையில் இன்று
அறிவித்தார் .
அதேபோல்
,மனித
நேயமக்கள் கட்சியின் சார்பில்
மயிலாடுதுறை தொகுதியில்
,அக்கட்சியின்
மூத்த தலைவர் ஹைதர் அலி
போட்டியிட உள்ளதாக ,அக்கட்சியின்
தலைவர் ஜே .எஸ்
.ரிபாயி
சென்னையில் இன்று அறிவித்தார்
.
0 comments:
Post a Comment