முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் கடந்த 2 தினங்களாக சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தரிகிறார்.
சிவப்புக் கலர் டாப்ஸ் கருப்பு பேண்ட் உள்ள சுடிதார் அணிந்திருக்கும் சிறுமி சமீபத்தில்தான் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. வெளிமாநில மொழி பேசுவதால் சிறுமி பேசுவது என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் மற்றும் சாலையில் செல்லும் காம வெறியர்கள் தங்களது காம பசிக்கு துரத்தியுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு பாதுகாத்துள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலைத்திற்கும், வருவாய்த்துறைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு ஒப்படைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறுமி அப்பகுதியை சுற்றி வருகிறார். சிறுமியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த சிறுமியை மீட்டு தக்க நேரத்தில் காப்பகத்தில் சம்மந்தபட்ட அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
allahantha sirumiyai paathuhaakka piraathikkiroom
ReplyDelete