முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் அருகில் உள்ள கோரையாறு வாய்க்காலில் நேற்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதிக்கு காலை கடன் முடிக்கச் சென்ற ஒருசிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், பெர்னான்டஸ், ராமலிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியோடு பிணம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
அப்பொழுது நடத்திய விசாரணையில் முத்துப்பேட்டை சின்னக்கட்சி மரைக்காயர் தெருவைச் சேரந்த கமால் என்பவரது மகன் அன்சாரி என்கிற ஷேக் அப்துல்லா(27) என்று தெரிய வந்தது. ஷேக் அப்துல்லா நேற்று அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்காக கோரையாற்றுக்கு வந்து பிறகு கால் அலசுவதற்காக வாய்க்காலுக்குள் இறங்கியதில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. மேலும் ஷேக் அப்துல்லாவுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் நடுக்கம் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. முத்துப்பேட்டை போலிசார் ஷேக் அப்துல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment