பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆதரவு கட்சிகள் மசூதிகளில் ஓட்டு கேட்பதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய முஸ்லிம் லீக் கட்சி புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை இன்று சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–
தேர்தல் பிரசாரத்தின் போது மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சென்று ஓட்டு கேட்பது வழக்கம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சேலத்தில் தே.மு.தி.க.வினர் பள்ளி வாசலில் ஓட்டு கேட்ட போது மோதல் ஏற்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடரக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் மோடி ஆதரவு கட்சிகள் மசூதிகள், பள்ளிவாசலில் ஓட்டு கேட்பதை தவிர்க்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்து–முஸ்லிம் மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும், கூட்டணி கட்சிகளிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மசூதிக்கு வேட்பாளரை அழைத்து செல்லும் போது மசூதியில் உள்ள சில முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது.
இத்தகைய மோதல் போக்கை தடுக்க மசூதிகளில் வாக்கு சேகரிக்க செல்வதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும். அல்லது பா.ஜனதா ஆதரவு கட்சிகள் செல்வதை மட்டுமாவது தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments:
Post a Comment