இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் Aachi இல் கி.பி. 1857 வரை முஸ்லிம் சமுதாயக் கட்டமைப்பை வடிவமைக்கின்ற நிறுவனமாக மதரசாக்கள் திகழ்ந்தன. இறுதி இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல் இறை இல்லமும் மதரசவும் ஒருங்கே அமையப் பெற்று முஸ்லிம்களின் ஈருலக வாழ்வியல் தொடர்பான அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் அங்கேதான் வழங்கப்பட்டன.
உலகம் அழிக்கப்படுகின்ற காலம் வரை வாழப் போகும் முஸ்லிம் சமுதாயம் கல்வியை எப்படி பெறவேண்டும் என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்களோ, பின்னல் வந்த கலிப்பாக்கள் அந்தக் கல்வி வழிமுறை யை எப்பை உலகை வெள்ளக் கூடிய கல்வி முறையாக பட்டைத் தீட்டித் தந்தார்களோ அதே போன்று தான் இந்திய முஸ்லிம் சமூகம் கி.பி.1857 . வரை கல்வி பயன்று வந்தது.
1857 க்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட ஆச்சி மாற்றம் தான் அத்துனையையும் அடியோடு மாற்றிப் போட்டது. அதில் முஸ்லிம்களின் மூல ஆதாரமான மதரசாக் கல்வி முறை சிக்கி சின்னாபின்னமாகிப் போனது.
ஆச்சி மாற்றத்திற்குப் பிறகு வெள்ளையர் ஆசியில் எவ்வித ஒருங்கிணைப்பும் உதவியும் இல்லாமல் நிர்பந்தமான சூழலில் தனி நபர்களால் உருவாக்கப்பட்ட தேவ்பந்த், அலிகர், நத்வ போன்ற புதிய மதரசாக்கள் ஒவ்வொன்றும் கருத்து மற்றும் பாடங்கள் ரீதியாக வேறுபட்ட வடிவமாக அமைந்திருந்தன. இதனால் இந்த நிருவனகளில் பயின்று வெளிவந்த பெரும்பான்மை மாணவர்களால் அன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் எந்த பிரச்சனைக்கும் வழிகாட்ட இயலாமல் போனது. கி.பி.1857 முதல் இந்தியா அடைந்த 1947 வரை உள்ள 90 ஆண்டுகள் தன இந்தியா முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றில் துன்பகள் நிறைந்த ஆண்டுகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன. தென்னிந்தியாவில் இதன் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும் கூட வடக்கே வாழ்ந்த முஸ்லிம்களின் துயரம் மிகுந்த மன வேதனைகளை தென்னக முஸ்லிம்களும் கொஞ்சம் உணரத்தான் செய்தார்கள். அந்த 90 ஆண்டு கால இந்தியா வரலாற்றை ஆழ்ந்து ஆய்வு செய்தால் மனிதனின் அடிப்படை உரிமையிலிருந்து கல்வி, கலாச்சாரம், சமூக, அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு என்று எல்லா வகைகளிலும் வஞ்சிக்கப் பட்ட மக்களாக முஸ்லிம்கள் மாற்றப்பட்டார்கள்.
தொடரும்...
தொகுப்புரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், ஷேக் அலாவுதீன், நூருல் அமீன்
0 comments:
Post a Comment