முத்துப்பேட்டை, செப்டம்பர் 27 : திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை யில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படும் சித்திக் மச்சன் என்கின்ற A .அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர் SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்று SDPI தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாளரும்மாகிய A . அபூபக்கர் சித்திக் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பேட்டியளித்த அவர், இந்த தேர்தலின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும், எந்த மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், அதாவது இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை பெற்று தறுவதற்கு முயற்சிகள் செய்வோம் என்றும், மேலும் அவற்றை முழுமையாக பெற்றுத்தர போராட தயாராகுவோம். அதே போல எந்த சமூகமும் பாதிக்கப் படாத அளவுக்கு பாரபட்சம் பார்க்காமல், எங்களுடைய கட்சி செயல்படும். நம்ம ஊரில் பாசிசம் தலை எடுக்காத அளவுக்கு என்னென்ன வழிகள் இருகின்றதோ அவற்றை தடுக்க முயற்சிகள் எடுப்போம் என்றும், முத்துப்பேட்டையில் உள்ள பொதுவான பிரட்சனைகலான குளங்கள், சாலைகள், பராமரிப்புகள் குறித்தும் நல்ல முடிவுகள் எடுக்கப் படும் என்றும்,தமிழகத்தில் எந்த இடங்களிலும் இல்லாத மனிதர்களை கண்காணிக்கக் கூடிய அதிநவீன கேமராக்களை தெருக்களில் முத்துப்பேட்டை ஊராச்சி மன்றத்திற்கு உட்பட்ட 4 இடத்தில் அப்பாவி மக்களை கண்காணிக்க இருக்கும் இந்த கேமராக்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெருவித்தார்.மேலும் SDPI கட்சியானது பணத்திற்கோ அல்லது பதவி, பட்டத்திற்கோ துனைபோகது என்பதை உறுதிபட நான் இங்கே கூறுகிறேன். இந்த அரசியல் காலத்திற்கு SDPI இறங்கியதற்கு முக்கிய காரணமே பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! நமது சமுகத்திற்கு எதாவது இந்த அரசியல் மூலம் செய்யலாம் என்ற ஓர் ஏக்கத்தில்தான் இந்த அரசியலில் இறங்கி உள்ளோம் . அதற்காக முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை மனமார ஏற்று என்னை வெற்றிபெற செய்யும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர்
தொகுப்பு: ரிபோர்ட்டர் இல்யாஸ்,
செய்தியாளர்: H . தமீம் நியாஸ்.
SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர்
masha allah i will make duaa victory for brother..
ReplyDelete