முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கி.முஹைதீன் அடுமை அவர்களை, ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில கொள்கை பரப்புச்செயலாளர், அல்ஹாஜ். G .M . ஹாஷிம் அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார். இதன் பின்பு பேசிய அவர்,தலைவர் கருணாநிதி உடன் இருந்து பல்வேறு உதவிகளை நமது சமுதாயாத்தவருக்கு பெற்றுத்தந்தது இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்றும், இந்த கட்சி பல ஆண்டுகளாக இருந்து வருவது தாங்கள் யாவரும் அறிந்ததுதான் என்றும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி செய்து கொடுப்பார் என்றும், இந்த கட்சி முஸ்லிம்கள் மீது அக்கறை காட்டக் கூடிய கட்சியாக இன்றுவரை இருந்து வருகிறது என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் M .M . ஜலாலுதீன், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி.M .முஹம்மத் அலி, திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் H .M .ஹபீபுல்லாஹ் மற்றும் கட்சி உறுபினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்.
முத்துப்பேட்டை பேரூராட்சி: வாக்கு சேகரிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment