முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : களத்தில் 13 பேர்...! கலக்கத்தில் கட்சிகள்...! குழப்பத்தில் மக்கள்...! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிட 22 பேர் மனு கொடுத்து இருந்தனர். பின்னர் 9 பேர் வாபஸ் வாங்கி கொண்டனர் போட்டியில் 13 பேர் உள்ளனர். இது முத்துப்பேட்டை பேரூராட்சியில் இது வரை இல்லாத வரலாறு என்று சொல்லப்படுகிறது. காரணம் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தவரும் நினைத்ததின் விளைவும் நமது சமுதாயத்தில் நான்தான் நியாயமானவன் என்று காட்டிக் கொண்டதின் விளைவும் தான் இந்த போட்டிக்கு காரணம்.அதன் வகையில் களத்தில் உள்ள 13 பேர் உறவினர்களும், நண்பர்களும் யாருக்கு வாக்கு சேகரிப்பதில் பெரும் சங்கடத்தில் பலரும் உள்ள நிலையில், பேரூராட்சியில் உள்ள 18 வார்டுக்கும் கவுன்சிலர் பதவிக்கு சுமார் 80 பேர் போட்டி போடுவதால்முத்துப்பேட்டை நகரத்தில் தேர்தல் வேலை மிக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னால் சென்று வாக்கு கேட்கும் தனது நண்பர்கள், மறுநாள் வேறு வேட்பாளருக்கு முன்னாடி சென்று வாக்கு கேட்பதால் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளரிடமும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள் பின் வருமாறு. source from www.muthupettaiexpress.blogspot.com
1 ). அபூபக்கர் சித்திக்: நான் பேரூராட்சி நிதியிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
2 ). அப்துல் சலீம்: என்னை தலித் மக்கள் தேர்வு செய்து நிற்க வைத்துள்ளனர் என்றும், எனது பணி மக்கள் பாராட்டும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
3 ) கோ.அருணாச்சலம்: நான் நீண்ட காலமாக நகர செயலாளராக இருக்கிறேன், அதற்கு காரணம் எனதின் திறமையான செயல்பாடு. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது முத்துப்பேட்டை மக்களுக்கு போராட்ட குரல் கொடுத்துரிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
4 ) முகைதீன் அடுமை: நான் இப்பகுதி மக்களுக்கு தேவை படுகிற பல விசயங்களையும், பல நல்ல காரியங்களையும், இஸ்லாமிய மக்கள் மக்கா செல்ல பல்வேறு சேவைகளையும் செய்துள்ளேன் என்றும், நமது பேரூராட்சியை நல்ல நிர்வாகமாக மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com
5 ). முஹம்மத் மாலிக்: மக்களின் முக்கிய பிரச்சனையான, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு இதனை முன்னிருமை படுத்தி கவனம் செலுத்துவதோடு மக்களின் தேவையை நன்கு அறிந்து திறமையாக செயல்பட பாடு படுவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
6 ). பத்மநாபன்: என்னை முத்துப்பேட்டை மக்கள் தேர்வு செய்தால் மக்களுக்கு சேவை செய்வதே எனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
7 ). சிவக்குமார் பேட்டை: என்னை தேர்வு செய்தால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com
8 ). எஸ்.தமீம்: நான் தி.மு.க.வின் உண்மையான விசுவாசி, நான் கவுன்சிலராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறேன்,என்னை தேர்வு செய்தல் சரித்திரத்தில் சாதனை படிப்பேன் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com
அதே போல சுயேச்சை வேட்பாளரான:
9). சஹாப்தீன்: மொத்தம் உள்ள 18 வார்டுகளையும் என் நேரடி கண்காணிப்பில் இணைத்து அந்த அந்த வார்டு உருபினர்கலையும், முக்கிய பிரமுகர்களையும் கலந்து ஆலோசித்து, தேவைகளை அறிந்து உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
10 ). ஹாரூன்: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் எல்லோருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தகுதியானவர் நான்தான் என்றும் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
11 ). லெப்பைத் தம்பி: மக்கள் பணியில் முறையான சேவை செய்யாமல் மக்களை அலைகழிக்கும் நேர்மையற்ற அதிகாரிகளை அகற்றி, நேர்மையான அதிகாரிகளை அமைத்து மக்கள் பணி தாமதமின்றி நடந்திட ஏற்பாடு சென்வேன் என்று கூறினார்.
12 ). ஜெயச்சந்திரன்: எல்லா மக்களுக்கும் பயன் பெரும் விதமாக பல்வேறு நல திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு கொண்டு வருவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
13 ). ஹாஜ மைதீன்: மிக முக்கியமாக குடிநீர் வசதி, தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com
இந்த நிலையில் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சமுதாயத்தில் பலரும் போட்டியிடுவதாலும், ஆளு ஆளுக்கு வித்தியாசமான வாக்குறுதி வழங்குவதாலும் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.யார் ஓட்டை யார் பிரிப்பார்? ஒவ்வொரு வேட்பாளர்களும் தனக்கு கிடைக்கும் வாக்குகளை கூறும் போது 13 வேட்பாளர்களுக்கு 48 ஆயீரம் ஓட்டுகள் கணக்கு வருது ஆனால் பேரூராட்சியில் 13 ஆயிரம் வாக்குதானே இருகின்றது. அதில் எத்தனை பதிவாகுமோ.. இதன் கணிப்பு யாருக்கு சாதகமோ என்ற குழப்பத்தில் கட்சியினர் உள்ளனர். இதே நிலைமைதான் 18 வார்டு கவுன்சிலர்கள், வேட்பாளர்களுக்கும் ஆனால் முத்துப்பேட்டை மக்கள் வேட்பாளர்களில் தனது சொந்த நடைமுறையில் யாரை பிடிக்கிறதோ அவர்களை தேர்வு செய்ய தயாராகி விட்டார்கள். முத்துப்பேட்டையில் யாரை நிலைமையை தற்போது கணித்து பார்க்கும் போது இரு சமுதாயத்தின் வாக்குகளையும் யார் அதிக அளவில் வாக்கு வாங்குவார்களோ அவர் தான் முத்துப்பேட்டையின் பேரூராட்சியின் தலைவர் ஆவார். பொறுத்திருந்து பாப்போம்!!! ஒற்றுமையின் குரல் ஓங்க.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி.AKL .அப்துல் ரஹ்மான்.அபு மர்வா, முஹைதீன்.
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment