முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர், அஸ்லம் பாஷா அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார், இதன் பின்பு பேசிய அவர், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமானது கடந்த ஆண்டுகளில் சமுதாய சேவைகளில் களப்பணியாற்றி வருவதாகவும், அதில் மக்களுக்கு முக்கியமாக ஆம்புலன்ஸ் சேவையை அதிகப்படுத்தி வந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். எனவே கடந்த 16 ஆண்டுகள் சமுதாய சேவையில் களப்பணி ஆற்றிவந்த நமது வேட்பாளரான முஹம்மத் மாலிக் அவர்களுக்கு தாங்கள் வாக்களிக்குமாறும், இவர் பல்வேறு சமுதாய மக்களுக்கு ரெத்ததான முகாம், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ முகாம், ஆகிய சேவைகளை செய்துள்ளார் என்றும், எனவே இவரை வெற்றிபெற நீகள்தான் முன் வரவேண்டும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் நாங்கள் கொடுத்த தேர்தல் அறிக்கை அது ஒரு வாக்குறிதி என்றும் எங்களால் என்ன செய்யமுடியுமோ அவற்றை நாங்கள் தங்களுக்கு கொடுத்துள்ளோம் என்றும், அவர் தெருவித்தார். அனால் வேறு கட்சிகாரர்கள் தங்களுடைய வாக்குறிதிகலை அதிகமாக குறிப்பிட்டு அவற்றை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெருவித்தார். இந்த மனித நேய மக்கள் கட்சி சிறப்பான அரும்பணிகளை ஆற்றிவருகிறது என்றும் அதில் தனது வேட்பாளர் மிக எளிமையானவர் என்றும், தூய்மையானவர் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை பேரூராட்சி: MMK விற்கு வாக்கு சேகரிக்க MLA பங்கேற்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment