முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாட பண்ணுவது போல் வந்த தகவலை அடுத்து, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்தரவின் படி முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) . அவர்களின் மேற்பார்வையில் எடையூர் இன்ஸ்பெக்டர் திரு. ஆறுமுகம் சிறப்பு SI திரு.ராஜேந்திரன், செல்வம், தெட்சனமூர்த்தி, சண்முகம் இவர்களின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இடையூறு அருகே திடீர் சோதனையில் இடுபட்டனர். அப்போது மிக வேகமாக வந்த காரை மறைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிவந்த SP பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் வயது 35 , மற்றும் முஜூபூர் ரஹ்மான் வயது 35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைதத் தொடர்ந்து மேலும் ஒரு கரை போலிசார் சோதனை செய்ய அந்த காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார், இந்த காரிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தப்பியோடிய டிரைவர் போலீசார் தேடிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனமான பைக்கையும் அப்போது சோதனை செய்ததில் ஒரு பைக்கில் சுமார் 50 குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது இதில் அந்த பைக்கை ஓட்டி வந்த தாமரைக்கோட்டையை சேர்த்த கிஸ்சர் வயது 40 என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

1 comments:

  1. யா அல்லாஹ் இந்த கொடிய செயல்களிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)